நெகிழ வைத்த மணப்பாறை எம்எல்ஏ.. கிட்னி ஆபரேஷன் செய்த நிலையிலும் சுஜித் கிராமத்தில் முகாம்!
Recommended Video
திருச்சி: மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளதால், அவர் நோஸ் பீஸ் அணிந்தபடி சிறுவன் சுஜித் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டதால் வெளியே செல்லக்கூடாது, தூசி படக்கூடாது என சந்திரசேகர் எம்.எல்.ஏ.வை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் தனது உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் கடந்த 3 நாட்களாக சிறுவன் சுஜித் மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறார் அவர்.

உடல்நலம் பாதிப்பு
மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சந்திரசேகர். இவர் இரண்டாவது முறையாக அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த ஒரு வருடகாலமாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு அவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அண்மையில் தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன் காரணமாக சிறிது நாட்கள் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

ஈடுபாடு
இந்நிலையில் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான் எனத் தகவல் கிடைத்ததும் வெள்ளிக்கிழமை இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு சென்றுகொண்டிருந்தார். அவரை தொடர்பு கொண்ட சந்திரசேகர் நானும் வருகிறேன் எனக் கூறி சம்பவ இடத்திற்கு சென்றார்.

சோர்வு
மீட்புப் பணிகள் ஒரு புறம் அதிதீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க சந்திரசேகர் எம்.எல்.ஏ.மிகுந்த சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதையடுத்து இதைக்கவனித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அறுவைச் சிகிச்சை செய்துள்ளாதால் நீங்க ஓய்வெடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என அவரிடம் கூறியுள்ளார். இல்லை..இல்லை எனக் கூறி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு அங்கேயே இருந்துவிட்டார்.

புழுதிக்காடு
நடுக்காட்டுப்பட்டியில் ரிக் இயந்திரங்கள் துளையிட்டு வருவதால் அந்தப் பகுதியில் புழுதிப்பறக்கிறது. இதனால் நோஸ் பீஸ் அணிந்தவாறு சந்திரசேகர் எம்.எல்.ஏ.அங்கு அமர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை பற்றிய விவரம் தெரியாததன் காரணமாக, எம்.எல்.ஏ.வுக்கு என்னாச்சு ஏன் இப்படி அமர்ந்துள்ளார் என அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் முணுமுணுத்துக்கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications