கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் திடீரென தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்! பதறிய போலீஸ்! ட்விஸ்ட்!
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேப்டன் பிரபாகரன் (1991) படத்தில் 'வீரபத்திரன்' என்ற வில்லன் கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

விஜய்யின் 'லியோ' (2023) படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். 2025 மற்றும் 2026 காலக்கட்டத்தில் 'படையாண்ட மாவீரா', 'ராஜ புத்திரன்', 'அங்கோரம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் மட்டுமல்லாது படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 'இந்திய ஜனநாயகப் புலி' என்ற சொந்தக் கட்சியை நடத்தி வருகிறார்.
இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி ஆகும். சினிமாவில் கொடூரமான வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு மிக்கவர் மற்றும் பல மேடைப் பேச்சுகளில் தனது தனித்துவமான பாணியால் மக்களைக் கவர்ந்து வருகிறார்.
1999 - பெரியகுளம் தொகுதி: புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் 1.3 லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2009 - திருச்சிராப்பள்ளி தொகுதி: சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
2019 - திண்டுக்கல் தொகுதி: நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் போட்டியிட்டு 54,957 வாக்குகள் பெற்றார்.
2024 - வேலூர் தொகுதி: தனது சொந்தக் கட்சியான 'இந்திய ஜனநாயகப் புலிகள்' சார்பாகப் போட்டியிட முயன்றார், ஆனால் இறுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் அவர் 2,804 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
2021 - தொண்டாமுத்தூர் தொகுதி: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "இந்திய ஜனநாயகப் புலிகள்" (IJP) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் லால்குடி சட்டசபை தொகுதியில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக களமிறங்குகிறார்.
இந்த தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று பிரச்சாரம் செய்த போது திடீரென கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். உடனே போலீஸார் பதறி போய் என்னவென கேட்க, "எனக்கு கருணாநிதி நினைவு வந்துவிட்டது. அதனால் இந்த தண்டவாளத்தில் படுத்தேன்" என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் 1953 ஆம் ஆண்டு நடந்தது. கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய போராட்டமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் ரயில் நிலையம் என பெயர் மாற்றத்தை கண்டித்தும் கல்லக்குடி என மாற்றக் கோரியும் கருணாநிதி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications