திருச்சிக்கு முதல்வர் எடப்பாடி வருகை - ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கொரோனா சோதனை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி, டெல்டா பகுதிகளில் சாகுபடி தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காவிரி, டெல்டா பகுதிகளை பார்வையிடவும், குடிமராத்து பணிகளை ஆய்வு செய்யவும் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் திருச்சிக்கு வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார்.

Massive Corona test for Trichy Collectorate officials

திருச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசதோனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Massive Corona test for Trichy Collectorate officials

மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வனிதா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, முதல்வருடன் நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Massive Corona test for Trichy Collectorate officials
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+