"அவதூறு அண்ணாமலை" ரொம்ப கேவலம் ! ஐபிஎஸ் படிச்சிட்டு இப்படியா பேசுவீங்க! துரை வைகோவுக்கு வந்த கோபம்!
திருச்சி : "அவதூறு அண்ணாமலை" நிறைய கருத்துக்கள் சொல்லி வருகிறார். இங்கு மதக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது இது போன்ற கருத்துக்கள் அவர் சொல்வதின் நோக்கம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ள மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, ஒரு ஐபிஎஸ் படித்த நபர் இது போன்ற கருத்துக்கள் சொல்வது மிகவும் கேவலமானது என விமர்சித்துள்ளார்.
திருச்சி திருவானைக்கோவில் வெங்கடேஸ்வரா தியேட்டரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தலைமை கழக செயலாளர் துரை வைகோ "மாமனிதன் வைகோ " திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படம் பார்த்தார்.
வைகோ குறித்த அவர் மகன் துரை வைகோ தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் தமிழகம் முழுவதும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு திரையிடப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

துரை வைகோ
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக கட்சி நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மாமனிதன் வைகோ படம் இன்று திருச்சியில் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று கோவையிலும் அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி ஒளிபரப்பப்பட்டது.

பி.எஃப்.ஐ
தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் பா.ஜ.க வுடன் தொடர்புள்ள ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அமைச்சர் பொன்முடி
அண்ணன் தம்பிகளாக பழகும் இந்து, முஸ்லிம்களிடம் வேற்றுமையை உருவாக்கி வாக்கு வங்கியை நிரப்ப சில சக்திகள் முயற்சிக்கிறார்கள் அதற்கு நாம் பலியாகி விட கூடாது. அடிப்படை தேவைகளைப் பற்றி பேசாமல் ஜாதி மத அடிப்படையில் அரசியல் நடக்கிறது பொதுமக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஓசி பேருந்தில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்று அமைச்சர் பொன்முடியும் பேசியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. அவர் சொன்ன கருத்து தவறான விதத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

"அவதூறு அண்ணாமலை"
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, "அவதூறு அண்ணாமலை" நிறைய கருத்துக்கள் சொல்லி வருகிறார். இங்கு மதக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது இது போன்ற கருத்துக்கள் அவர் சொல்வதின் நோக்கம் என்ன?" ஒரு ஐபிஎஸ் படித்த நபர் இது போன்ற கருத்துக்கள் சொல்வது மிகவும் கேவலமானது" என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications