விஜய் அழைப்பால் சிந்திக்கும் விசிக, ஐயூஎம்எல்.. அமைச்சரவையில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனா அப்டேட்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றார்கள். ஆனால் சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் அதிமுக வேலுமணி, சி.வி சண்முகம் அணியினர் இடம்பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற விசிக, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்களுக்கு தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும். அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து விசிக, ஐயூஎம்எல் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விசிக, ஐயூஎம்எல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக நீதி கொள்கையுடைய அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

தவெக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு
இந்த அரசு சமூக நீதி, மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கும். அந்தக் கட்சிகளின் கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். அமைச்சரவையில் விசிக இடம்பெற திருமா அண்ணனுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து சமூக நீதி தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் நினைக்கிறார். விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
குதிரை பேரம்
தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். பின்புற வாசல் வழியாக பழனிசாமி ஆட்சியை பிடித்து முதலமைச்சராக முயற்சித்தார். எடப்பாடியும், திமுகவும் இணைந்து தான் குதிரை பேரம் நடத்தினார்கள். திமுகவும் தங்களின் கொள்கையை மறந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தனர்.
திமுக மீது விமர்சனம்
திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க ஸ்டாலின், உதயநிதி முயன்றனர். அதிமுகவுடன் இணைந்து மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டது திமுக. அமைச்சர் பதவிக்காக சி.வி சண்முகம் எங்களுக்கு ஆதரிக்கவில்லை. தங்கள் கட்சியை பாதுகாப்பதற்காகவே அவர்கள் தவெகவை ஆதரித்தனர். திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை" என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications