50 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற முதல்வர் உத்தரவு.. அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் முறையாக கால்வாய்களை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டி தூர்வாரி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது -என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    50 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற முதல்வர் உத்தரவு.. அமைச்சர் தகவல்

    திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 481 குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை
    திருச்சி மாவட்ட ஆட்சியர் சுவராஜ் தலைமையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

    தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு இலங்கைத் தமிழர்களுக்கு எங்களை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது. இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற இலங்கை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்த மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும்.

    200 ஆண்டில்

    200 ஆண்டில்

    பத்தாண்டு காலமாக எடப்பாடியும் பன்னீர்செல்வமும் முறையாக ஒழுங்காக கால்வாய்களை கட்டி இருந்தால்,வெட்டி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினை இல்லை. 200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது - முதல்வர் நேரடியாக சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

    தண்ணீர் தேங்க

    தண்ணீர் தேங்க

    தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? எந்த இடத்தில் தண்ணீர் தேங்குகிறது என்பதனை ஆய்வு செய்து அடுத்த ஓராண்டில் அதனை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி

    திருச்சி

    திண்டுக்கல் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக திருச்சி அரியாறு மற்றும் கோறையாற்றில் அதிகபடியான நீர் தேங்கி உள்ளது. இது குறித்து பொது பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கீடு செய்து வருகிறார்கள். எனவே உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    சிபிஎஸ்இ

    சிபிஎஸ்இ

    தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : பள்ளிக் கூடங்களில் தேங்கி உள்ள தண்ணீரை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பொதுப் பணித் துறை தலைமையிலான குழு பள்ளிகளில் கட்டடங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த கட்டடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ மட்டுமே தேர்வு வைத்துள்ளனர். நம்மை பொருத்தவரை தேர்வுகள் ஏதும் நடத்தவில்லை என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+