திமுகவும் அதிமுகவும் ஒன்னு தான்.. உ.பி.களை ஊக்குவிக்கும் எடப்பாடி! ஒரே போடாகப் போட்ட செங்கோட்டையன்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுகவினர் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்காமல் செயல்பட்டு பேசி வருகின்றனர் எனவும், எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் வேறு அல்ல.. இருவருமே அரசியலைப் பொறுத்த வரை ஒன்றுதான். திமுகவினர் அவதூறாக பேசுவதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என வருவாய்த் துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது.

துணை சபாநாயகர் ரவிசங்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்தீக் தாயள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Edappadi Palaniswami

கேஏ செங்கோட்டையன்

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்," திருச்சி மாவட்டத்தில் வருவாய் துறையில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் நிறைவடைந்த பணிகள், காலதாமதமாக நடைபெறும் பணிகள், அதற்கு காரணம் என்ன ? உள்ளிட்டவை குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற்று வரும் பணிகள் அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.

பட்டா வழங்கும் பணி

ஒவ்வொரு துறையும் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின்படி செய்து வருகிறோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், பட்டா போன்றவற்றை விரைவாக கொடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம். 20 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் அந்தப் பணிகளை விரைந்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழக அரசு

நவம்பர் மாதத்திற்குள் பெரும்பாலான பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ரேகை சரியாக பதியவில்லை என்று குறைபாடு உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மூன்று மாத காலமாக என்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்து கொண்டிருக்கிறோம்.

தவெக அரசு

சென்னை மாநகராட்சி பொருத்தவரை 15 மண்டலங்களாக பிரித்து 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 7 அமைச்சர்கள் குழுவை அமைத்து குழுவின் மூலமாக முதலமைச்சர் ஆய்வு பணிகளை என்ன நடைபெற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம். இயற்கை பாதித்த போது அதனை பாதுகாப்பது கடமை. ஐந்தாண்டு திமுக காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழக அரசு தான் மழை நீர் பணி விரைவாக முடித்து வருகிறது." என்றார்.

மரிய வில்சன்

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்துக்கு தேவையான நிதி வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெளிவாக விளக்கியிருக்கிறார். அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி காலத்தில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது தமிழக வெற்றி கழகம் நல்ல பெயர் வாங்குவதாக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு விமர்சித்து இருக்கிறார். அவரவர் ஆட்சி காலத்தில் இது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தான் இவை. கடந்த ஆட்சியில் திமுக அந்த பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை. ஆனால் நான்கே மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து பணிகளையும் விரைவாக செய்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

திமுகவினர் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்காமல் செயல்பட்டு பேசி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சுகளை அவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் வேறு அல்ல இருவருமே அரசியலைப் பொறுத்தவரை ஒன்றுதான். திமுகவினர் அவதூறாக பேசுவதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+