ரூ 50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலமோசடி! சேகர்பாபுவுக்கு தெரியாம வாய்ப்பே இல்லை! ரமேஷ் பகீர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டு திமுக கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக சில ஆதாரங்களை இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இன்று புரட்டாசி சனிக்கிழமை, பெருமாள் பக்தர்கள் கொண்டாடும் நாள். அதிலும் குறிப்பாக உலகப் புகழ் பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் முன்பு நாம் இருக்கிறோம்.

Srirangam land scam

இந்த கோயிலை பொருத்தமட்டில் எத்தனையோ பக்தர்கள், ஆன்மீகவாதிகள், கோயிலுக்காக சொத்துக்களை தானமாக எழுதி வைத்துள்ளனர். இந்த கோயிலுக்கான நலப்பணிகளும் தர்ம காரியங்களும் அதன் மூலம் செய்யப்படுகிறது.

ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனது தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை திமுக நிர்வாகி ஆக்கிரமித்து அதை திமுக அலுவலகமாக நடத்தி வருவதாக நிறைய பேர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 1866 ஆம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என்ற ஒரு சொத்து பத்திரம் கொடுத்திருக்கிறார்கள்.

சொத்துரிமை பத்திரம் 1027 என்ற எண் கொண்ட ஆவணத்தில் வரும் 329 ஏக்கர் பல்வேறு சர்வ எண்களில் உள்ள அனைத்து நிலங்களும் கோயிலுக்கு சொந்தமானது என கொடுத்திருக்கிறார்கள். 1910 ஆம் ஆண்டு இனாம் கமிஷனரும் இதை உறுதி செய்துள்ளார். 1930 ஏ பதிவேட்டிலும் கோயில் நிலம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக பகுதி செயலாளர் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்து திமுக அலுவலகம் கட்டியிருக்கும் சர்வே எண்ணும் , ஏ பதிவேட்டில் இருக்கும் சர்வே எண்ணும் ஒரே எண்தான், அது கோயில் நிலம் என்பது தெரியவருகிறது.

2020 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சொத்துரிமை பத்திரம் 1027-க்கு கீழ் வரும் நிலங்கள் அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானது.இந்த நிலங்களை எல்லாம் விற்கவோ வாங்கவோ கூடாது என பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டசபையில் சிவன் சொத்து குலநாசம் என சொன்னவர் (சேகர்பாபு)பெருமாள் சொத்தை மட்டும் எடுத்து திமுகவுக்கு கொடுக்கலாமா? வருவாய்த் துறை, போலீஸார், அறநிலையத் துறை, பத்திரப்பதிவுத் துறை என இத்தனை துறைகளை ஏமாற்றி ஒரு பகுதி செயலாளரால் எப்படி பத்திரப்பதிவு செய்திருக்க முடியும்? அந்த நிலத்தின் மதிப்பு ரூ 50 கோடி இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு மதிப்பிலான ஒரு நிலத்தை சாதாரண பகுதிச் செயலாளர், முன்னாள் இந்து அறநிலையத் துறை அமைச்சர், கமிஷனர், பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி பத்திரப்பதிவு செய்ய முடியும்?

எனவே மிகப் பெரிய நபர்களின் தலையீடு இல்லாமல் இதை செய்திருக்க முடியாது என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரியும். அந்த அளவுக்கு நூதனமாக செயல்பட்டு மோசடி செய்துள்ளனர். எனவே இந்த மோசடிக்கு யார் காரணம், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சரா, அதிகாரிகளா, திமுக புள்ளிகளா என்பதை விசாரணை நடத்தி வருகிறோம் என ரமேஷ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+