Cellphone: கோயிலுக்குள்ள எதுக்குங்க செல்போன்? நம்ம போறதே.. டென்ஷனான அமைச்சர் ரமேஷ்
திருச்சி: கோயிலுக்குச் செல்வதே மன அமைதிக்காகத்தான், பிறகு எதற்காக செல்போன் கொண்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் அது தேவையற்றது என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோயிலுக்குள் மன அமைதிக்காக போகிறோம். அந்த இடத்தில் செல்போன் தேவையற்றது. வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நாம் இறைவனை தரிசிக்க போகிறோம்.

கோயில்கள், அறக்கட்டளைகளுக்கு முன்னோர்கள் தர்ம காரியங்களுக்காக வழங்கிய நிலங்களை, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சில இடங்களில் நிலங்களின் உண்மையான பயன்பாடு, உரிமை தொடர்பான விவரங்களை மறைத்து முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது. கோயில் சொத்துக்களை எந்த நிலையிலும் அறநிலையத் துறை விட்டுக் கொடுக்காது.
பழனியில் நடைபெற்ற சம்பவம் போன்று தான் நீதிமன்றம் சென்று நிராகரிப்பு சீட்டு வாங்கி வந்து இது போன்ற விஷயங்கள் நடக்கிறது, நீதிபதியும் நீதிமன்றத்தின் ஏமாற்றி ஆர்டர் பெற்று இருக்கிறார்கள் என்பதனை நீதிபதியே குறிப்பிட்டுள்ளார், பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்த பழனி நிலத்தை மீட்டுள்ளோம். அதுபோல கவனத்திற்கு வந்தவுடன் அதனை மீட்க வேண்டும் மீட்காமல் இருப்பது தான் தவறு கடந்த ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு அதிகாரம் மாற்றம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்வதற்கான முயற்சி நடந்தது. தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் கவனத்திற்கு வந்த பிறகு பத்து நாட்களுக்கு முன்பாக கோவில் நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் என 19 பேர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் திருக்கோவில் பணிகள் மற்றும், திருக்கோவில்களுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் குளங்கள் சீரமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்
அடிமனையில் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருவதுடன் சட்ட வல்லுனர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு எந்தவிதமான முன்னெடுப்புகள் எடுக்க முடியுமோ நிச்சயமாக எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன்களை பாதுகாக்கும் கவுன்ட்டர்களும் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து இந்து அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1. திரைத்துறை பிரபலங்கள் / முக்கியஸ்தர்கள் / VIP தரிசனம்
திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது VIP-க்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் எனது அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.
2. புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் தடை
திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு VIP-க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
