அமைச்சருக்கும்-மாவட்டச் செயலாளருக்கும் பனிப்போர்...! திருச்சி அதிமுகவில் கலகக் குரல்
திருச்சி: கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரத்தில் அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர் வளர்மதிக்கும் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
திருச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், அமைச்சர் வளர்மதி தலையிட்டு தனது ஆதரவாளர்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்துமாறு கூட்டுறவு சங்க அதிகாரிகளை வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மாவட்டச்செயலாளர் பரிந்துரைத்த நபர்களை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கூட்டுறவு தேர்தல்
திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கு மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் 18 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 3 உறுப்பினர்களை தேர்வு செய்வதில் மட்டும் கடும் போட்டி ஏற்பட்டது. அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலும், மாநகர் மாவட்டச்செயலாளர் குமாரும் ஒன்றியச்செயலாளர்கள் மூன்று பேரை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தனர்.
அதிகாரிகளுக்கு திட்டு
கூட்டுறவு சங்க அதிகாரிகளும் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களே கூறிவிட்டதால் எந்த சிக்கலும் ஏற்படாது என நினைத்த நிலையில், அமைச்சர் வளர்மதி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனது ஆதரவாளர்கள் மூன்று பேரை உறுப்பினராக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினாராம். இது தொடர்பாக அவரை சந்திக்க வந்த அதிகாரிகளை, அமைச்சர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினாராம்.
தலைமையிடம் புகார்
இதனால் கொதித்துப்போன மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேலும், குமாரும், இது குறித்த புகாரை கட்சி தலைமைக்கும், ஆட்சி தலைமைக்கும் கொண்டு சென்றுள்ளார்களாம். மேலும், சீனியர்கள் என்ற முறையிலும் முன்னாள் எம்.பி.க்கள் என்ற வகையிலும் மாவட்டச் செயலாளர்களுக்கு அமைச்சர் வளர்மதி உரிய மரியாதை தரவில்லை எனப் புகார் கூறுகின்றனர் திருச்சி அதிமுகவினர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications