ஆக்சிஜன் கொடுத்து இருக்கோம்.. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. அமைச்சர் விஜய் பாஸ்கர்!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தின் நிலை குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தின் நிலை குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
நேற்று முதல் நாள் மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். சரியாக 5.40 மணிக்கு அந்த சிறுவன் மாலை விழுந்தார். 6 மணிக்கு தொடங்கிய மீட்பு பணிகள் தற்போதும் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் இன்னொரு பக்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவனித்து வருகிறார்.

என்ன பேட்டி
இந்த நிலையில் அந்த சிறுவனின் நிலை குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், சுஜித்திற்கு நாங்கள் ஆக்சிஜன் கொடுத்து இருக்கிறோம். அவன் தற்போது 100 அடி ஆழத்தில் இருக்கிறான். டியூப் வழியாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிலிண்டர் மாற்றி ஆக்சிஜன் அனுப்பி வருகிறோம்.

சுஜித் எப்படி
ஆனால் அந்த ஆக்சிஜனை சுஜித் ஏற்றுக்கொள்கிறானா என்று தெரியவில்லை. கீழே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, எங்களால் கணிக்க முடியவில்லை. அதனால் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

தாமதம்
தற்போது 30 அடி வரை குழி தோண்டிவிட்டோம். இதற்கும் மேல் குழி தோண்டுவது கொஞ்சம் கடினம். அடியில் நிறைய பாறைகள் இருக்கிறது. அதில் ஆழ்துளை போடுவது கடினம். அதனால் பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

இன்னொரு வாகனம்
இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து இன்னொரு வாகனம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த வாகனம், அதிக சக்தி வாய்ந்த ரிக் மிஷினை கொண்டு இருக்கும். அதனால் அதை வைத்து நாங்கள் குழி தோண்ட இருக்கிறோம், என்று விஜய பாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications