Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.61.44 கோடி - 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 6.5 மடங்கு அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்ப சொத்து மதிப்பு 61,44,14,889 ரூபாய் என வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் மதிப்பு ரூ.9.91 கோடி எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ஆம் தேதியன்று தொடங்கியது. முதல்நாளில் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 15ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி, மு.க ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆதரவாளர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு தாக்கலில் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

சொத்து விபரங்கள்

சொத்து விபரங்கள்

விஜய பாஸ்கரின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.29 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 890 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 984 என மொத்தம் ரூ.37 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆகும்.

ரூ.61.44 கோடி

ரூ.61.44 கோடி

மனைவி ரம்யா பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 800 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 63 லட்சத்து 87 ஆயிரத்து 652 என மொத்தம் ரூ.22 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரத்து 452 ஆகும்.
மேலும், தனது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரத்து 563 ஆகும் என இவர்களின் குடும்ப அசையும் மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ.61,44,14,889 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் அதிகரிப்பு

5 ஆண்டுகளில் அதிகரிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 52 லட்சத்து 81 ஆயிரத்து 94 ஆகவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சமாகவும் இருந்தது. மேலும், அவரது மனைவி ரம்யா பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 71 லட்சத்து 51 ஆயிரத்து 234 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடும்ப சொத்து அதிகரிப்பு

குடும்ப சொத்து அதிகரிப்பு

மேலும், இவர்களது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் என அப்போது இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.9,08,77,328 ஆக இருந்தது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.52 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரத்து 561 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் எவ்வளவு

கடன் எவ்வளவு

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டில் கடன் மதிப்பு ரூ.16.71 கோடி எனவும், 2021ஆம் ஆண்டில் கடன் மதிப்பு ரூ.9.91 கோடி எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+