திருச்சி அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட இருவர் பலி
திருச்சி: திருச்சி அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ்(எ)வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார்.
மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

பரம்பூர்
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார்.

பரம்பூர்
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார்.

உயிரிழப்பு
திருச்சியில் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச் சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனை
அருகே இருந்தவர்கள் இருவரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வத்தின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை
உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெங்கடேசனின் தாய் இந்திராஅம்மா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications