தமிழக சட்டசபையில் விஜய் பதிலுரையில் எந்த தவறும் இல்லை! அமைச்சர் விஸ்வநாதன்
திருச்சி: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் பேச்சு தவறாக இல்லை. அவர் அமலாக்கத் துறை வழக்குகளை பேசுவதற்கு உரிமை இருக்கிறது என திருச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறும்.

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள ஒவ்வொரு வழக்கும் வித்தியாசப்படும். சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவது தவறாகவே ஆகாது. அவர் பேசுவதற்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது.
முதலமைச்சரின் பதிலுரை சட்டமன்ற வரலாற்றிலேயே முக்கியமான உரையாக இருக்கிறது என நான் சட்டமன்றத்தில் பேசினேன்.
பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறுவதில் எங்களுக்கு தயக்கமே கிடையாது. நான் பிறப்பால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். எங்களுடைய ஒரே கருத்து ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக கூறுவார்கள். அந்த வகையில் 140 ஆண்டுகால பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுல் காந்தியை தான் கூறுகிறோம். அதில் எந்த தவறும் கிடையாது.
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூற மாணிக்கம் தாகூர் தயக்கம் காட்டுகிறாரே என்கிற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் என்கிற முறையில் நான் பகிரங்கமாக கூறுகிறேன். 2029 ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.
விஜய் பிரதமர் வேட்பாளர் என்கிற கருத்து தவறாக கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜய் அறிவிப்பார், அறிவிக்கக் கூடும்.
ராகுல் காந்தியை பிரதமராக விஜய் அறிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தான கேள்வி இப்போது தேவையில்லை.
உலக வரலாற்றில் ராகுல் காந்தியின் போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது போராட்டமும் தியாகமும் நிறைந்த ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் அதற்காக நாங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறோம்.
எங்கள் கூட்டணியில் இடதுசாரிகளும் இணைவார்கள் என்கிற நம்பிக்கையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். விலைவாசி உயர்வு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்விக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜயின் இமேஜ் உச்சத்தில் தான் இருக்க போகிறது நிச்சயம் இந்த இடைத் தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என பதில் அளித்தார்.
விலைவாசி உயர்வு குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவோம். ஆனால் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மீண்டும் மீண்டும் உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என பதில் அளித்து சென்றார்.
தமிழக சட்டசபையில் சர்காரியா கமிஷன் குறித்தும் அமலாக்கத் துறை வழக்கு குறித்தும் முதல்வர் விஜய் பேசியதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அது தவறில்லை என சொல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
