“மோடி பிரச்சாரத்துக்கு வரும் நாளில் அதிசயங்கள் நடக்கும்”.. பொடி வைத்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும்போது, மேடையில் அவருடன் யார் யார் இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். அதிசயங்கள் நடக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக, அமமுக, பாமக (அன்புமணி) தமாகா, தமமுக, ஐஜேகே என கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது. இது அதிமுக கூட்டணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "திமுகவின் இடைக்கால பட்ஜெட் என்பது வெங்காயத்தை உரித்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஒன்றும் இருக்காது." என்றார்.
மேலும் பேசிய அவர், திமுகவின் எதிர்ப்பு மற்றும் எங்களது கூட்டணியின் பலம் பற்றியும் எடுத்துரைத்து தேர்தலை சந்திப்போம். வைகோ அப்பிராணி. அவர் பாவம். வயது முதிர்ந்தவர். அவரை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் விஜய்யின் சக்தி என்ன என்பது தெரியவரும். விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தேர்தல் பரபரப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் அமெரிக்க மாடலில் மக்களை சந்திக்காமல் டி.வியில் பிரச்சாரம் செய்யப் போகிறார் போல. அங்கெல்லாம் இதுபோலதான் செய்கிறார்கள். என்ன ஐடியாவில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
5000 ரூபாய் வழங்குவது என்பது நமது பணத்தை தான் அவர்கள் தருகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். விலைவாசி உயர்வு மின்சார உயர்வு என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்தால் சரி இருக்காது என மக்கள் எண்ணுகிறார்கள்.
'ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும்' என்ற திமுகவின் பிரச்சாரம் போல 'எடப்பாடி வெல்லட்டும் தமிழக முன்னேறட்டும்' என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சரியாக வராது என்று திமுக தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார்கள்.
பாஜக, அதிக சீட்டுகள் கேட்பது குறித்து இன்னும் பேசவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்க இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் வருவது என்பது பிரச்சாரத்திற்காக. மேடையில் அவர் ஏறும்போது தான் யார் இருப்பார்கள் என்று தெரியும். அதிசயங்கள் நடக்கும்" எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கட்சி ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்விக்கு "அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்பது தெரியாது. அவர் ஆரம்பித்த பிறகு நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "அவர்களே கூறி விட்டார்கள். யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கே போக வேண்டுமோ, போவோம் என்றார்கள். போய்விட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications