மனம் நெகிழ்ந்து போனது.. திருச்சியில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் ஸ்டாலின் கருத்து
திருச்சி: லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி புதுக்கோட்டை எல்லைப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமிட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானம் திருச்சியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. சுமார் 2.40 மணிக்கு விமானம் ஓடுதளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டர்.
இதன் காரணமாக சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்து நிலையில், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன.
மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்தனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்தனர். மேலும் விமானம் தர இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சிறிது நேரத்தில் பத்திரமாக விமானம் தரையறுக்கப்படும் என அவர் தெரிவித்தனர். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.
இதற்கிடையே புதுக்கோட்டை அருகே சுற்றி வந்த விமானம், இரவு சுமார் 8.20 மணியளவில் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் நோக்கி சென்றது. சுமார் 8.30 மணிக்கு விமானியில் சாதுர்யத்தால் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் லேசாக புகை மட்டுமே வந்தது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பயணிகளும் சுற்றுவட்டார பகுதிகளில் திரண்ட பயணிகளும் கைதட்டி உற்சாகமாக பயணிகளை வரவேற்றுனர்.
இந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.
மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்." என கூறியுள்ளார்.
இன்று மாலை தான் முதலமைச்சரின் நெருங்கிய உறவினரான முரசொலி செல்வம் மரணமடைந்த நிலையில், மாலையே இந்த விவகாரம் நடைபெற்றது. இருந்த போதும் முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications