உறுதியா இருங்க... உரிய மரியாதை கிடைக்கும்... நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளை திருச்சிக்கு அழைத்து சந்தித்த மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும் என அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவிடம் இருந்தும் அங்கு அதிமுகவை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி தலைவராக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை திருச்சியில் வைத்து சந்தித்த ஸ்டாலின், மனப்பிறழ்வு அடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

திருமண விழா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் நடைபெற்ற பந்தல் சிவா இல்ல மண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்தார். பின்னர் தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அவர், அங்குள்ள சங்கம் ஹோட்டலில் வைத்து தஞ்சை மாவட்டத்தில் வெற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்.

வருத்தம்
இதையடுத்து இன்று காலை திருச்சியில் வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தனது வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், 11 மாவட்ட கவுன்சிலர்கள் இருந்தும் அதிமுகவை சேர்ந்த ஒருவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக வந்திருக்கிறார். அதை உங்களால் தடுக்க முடியவில்லையே என கூறியிருக்கிறார்.

நம்பிக்கை
இன்னும் ஒன்றரை ஆண்டில் உறுதியாக திமுக ஆட்சி அமைந்துவிடும் என்றும், அப்போது நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அரசியலை விட்டே ஓடி விடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், மனப்பிறழ்வு அடையாமல் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை தரப்படும் என ஸ்டாலின் அவர்களிடம் நம்பிக்கையூட்டியுள்ளார்.

கருணாநிதி சிலை
உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு திருச்சியில் 31-ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஏற்பாடுகள் பற்றி கே.என்.நேருவிடம் ஆலோசித்துள்ளார். அதன் பிறகு விழுப்புரத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதற்காக சாலைமார்க்கமாக ஸ்டாலின் பயணித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications