Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“குண்டுவெடிப்பு” - அமைச்சர் கருத்து! இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடாத சிக்கல்.. விடுதலையில் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் கைதானவர்களை தவிர்த்து மற்றவர்களை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி பேசியது, கோவை ஆயுள் சிறைவாசிகள் விடுதலையாவதில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 தமிழர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கோவை இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றன.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, த.வா.க தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இதை வலியுறுத்தினர்.

அண்ணா பிறந்தநாள்

அண்ணா பிறந்தநாள்

கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த விடுதலைக்கு தகுதியானவர்கள் என அரசாணையும் வெளியிடப்பட்டது.

17 வகை குற்றங்கள்

17 வகை குற்றங்கள்

தமிழ்நாடு அரசின் ஆணையில், "பயங்கரவாதம், மத மோதல், சாதி மோதல், வகுப்புவாத மோதல்கள், பாலியல் வன்கொடுமை, வெடிகுண்டு வழக்கு, ஊழல், சிறையிலிருந்து தப்பிட்ட முயன்றவர்கள் போன்ற 17 வகையான குற்றங்களை செய்தவர்களுக்கு விடுதலை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. விடுதலை செய்ய வலியுறுத்தப்படும் கோவை சிறைவாசிகள் மீது இந்த பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு விடுதலை கிடைக்கல்லை.

 எஸ்டிபிஐ பேரணி

எஸ்டிபிஐ பேரணி

இந்த நிலையில் இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள், மற்றும் பேரறிவாளனை தவிர்த்து எஞ்சிய 6 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 8 ஆம் தேதி கருப்பு சட்டை பேரணி நடத்தப்பட்டது. மாநில தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பேரணியில் 5,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வதற்காக முதல் கட்டமாக 600 பேரை தேர்வு செய்துள்ளோம். கைதிகள் தொடர்பாக தனி தனியாக கோப்புகள் அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்லாமிய சிறைவாசிகள்

இஸ்லாமிய சிறைவாசிகள்

இதில் 100 பேர் வரை விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள். மற்றவர்களும் ஆளுநர் கையெழுத்து போட்டபடி விடுதலை செய்யப்படுவார்கள். இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து ஆதிநாதன் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் குண்டுவெடிப்பு போன்ற வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் தவிர மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும்." என்றார்.

 இந்த ஆண்டும் சிக்கல்

இந்த ஆண்டும் சிக்கல்

கடந்த ஆண்டுபோல் இந்த முறையும் குண்டு வெடிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி பேசியதன் மூலம், கோவை ஆயுள் சிறைவாசிகள் விடுதலை இந்த ஆண்டு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விதிகளை கடந்த ஆண்டே நீக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி நிலையில், தற்போதும் அதே விதிகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+