இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையா? நல்ல தீர்வு கிடைக்கும் - அமைச்சர் ரகுபதி உறுதி
திருச்சி: வெடிகுண்டு போன்ற வழக்குகளை தவிர மற்ற வழக்குகளில் சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 தமிழர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கோவை இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடனே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, த.வா.க தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இதை வலியுறுத்தினர்.

700 ஆயுள் கைதிகள்
கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆதிநாதன் ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு. இதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால், கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியபடி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை.

எஸ்டிபிஐ பேரணி
இந்த நிலையில் இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள், மற்றும் பேரறிவாளனை தவிர்த்து எஞ்சிய 6 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 8 ஆம் தேதி கருப்பு சட்டை பேரணி நடத்தப்பட்டது. மாநில தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பேரணியில் 5,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரகுபதி
இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வதற்காக முதல் கட்டமாக 600 பேரை தேர்வு செய்துள்ளோம். கைதிகள் தொடர்பாக தனி தனியாக கோப்புகள் அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்லாமிய சிறைவாசிகள்
இதில் 100 பேர் வரை விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள். மற்றவர்களும் ஆளுநர் கையெழுத்து போட்டபடி விடுதலை செய்யப்படுவார்கள். இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து ஆதிநாதன் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் தவிர மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும்." என்றார்.
-
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications