Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Code word Accepted..GOAT-ல் MIC எதுக்கு? 2026ல் கூட்டணி..எங்களுக்கே ஆதரவு! சாட்டை துரைமுருகன் சரவெடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தி கோட் படத்தின் முதல் பாடலில் விஜய் மைக் சின்னத்தை வைத்து எங்களுக்கு மறைமுக ஆதரவை கொடுத்துள்ளார்..நிஜ சூப்பர் ஸ்டாரான விஜய் 150 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வருகிறார் அவரை நாங்கள் வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடிக்கும் 68வது படத்துக்கு தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Naam Tamilar katchi Sattai Durai Murugan says Vijay has given us an indirect support by using the mic symbol

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தி கோட்: இந்நிலையில் தி கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு தமிழ் புத்தாண்டை ஒட்டி நேற்று வெளியானது. விஜய்யின் குரலில் , யுவன் சங்கர் ராஜாவின் பட்டையை கிளப்பும் இசையோடு இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு கோடி பார்வைகளைக் கடந்து யூட்யூபில் சாதனை படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இதனை வைத்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மைக் சின்னம்: அதில் சூப்பர் என காட்டும் சைகை குறியீடோடு, மைக் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சின்னம் ஆகும். இதை அடுத்து விஜய் தனது பாடலின் குறியீடாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மைக் சின்னத்தை வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களை புரட்டி எடுத்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். தி கோட் படத்தின் முதல் பாடலில் விஜய் மைக் சின்னத்தை வைத்து எங்களுக்கு மறைமுக ஆதரவை கொடுத்துள்ளார் என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.

சாட்டை துரைமுருகன்: இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன்," கோட் பாடல் மூலம் மறைமுகமான ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு விஜய் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கேம்பைனை தொடங்கு.. மைக்கை பிடி போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. மைக் சின்னத்தை அந்த பாடலில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் வைத்திருக்கிறார்.. இதன் மூலம் தங்களை மறைமுகமாக விஜய் ஆதரிக்கிறார் என்று தெரியவருகிறது..

நாம் தமிழர் கட்சி: மைக் சின்னத்தை வைக்கும் போது அது நிச்சயம் நாம் தமிழர் கட்சியை தான் குறிக்கும் என்பது விஜய்க்கு தெரிந்திருந்தும் வைக்கப்பட்டிருக்கு. இரண்டு பேரின் கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு அறிக்கையில் ஊழல் மலிந்த அரசியல் ஒரு பக்கம் மத பிளவுவாத அரசியல் ஒரு பக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார்.. இந்த இரண்டுக்கும் மாற்றாக தவெக இருக்கும் என கூறியிருந்தார். அதனையே நாம் தமிழர் கட்சியும் முன் வைக்கிறது. மேலும் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என விஜய் தனது கட்சியின் முழக்கமாய் வைத்திருக்கிறார் அதனையே நாம் தமிழர் கட்சியும் சொல்லி வருகிறது.

உச்ச நட்சத்திரம்: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் தான் அவரது கொள்கை என்ன என்று தெரிய வரும்.. அதுவரை தமிழக வெற்றி கழகத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவிதமான முரணும் இல்லை . விஜய்யின் அரசியல் வருகையை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.. ஒரு தமிழன் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது.. இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் 150 கோடி சம்பளம் பெரும் நிலையில் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.. மேலும் வயதாகிவிட்டது அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை என விஜய் அரசியலுக்கு வரவில்லை.

2026ல் கூட்டணி: பட வாய்ப்புகள் கிடைக்கும்போதே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக இருக்கும் விஜய் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.. 2026 இல் நாம் தமிழர் கட்சியின் தமிழக வெற்றிக்கழகமும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பதாக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் போய்க் கொண்டிருக்கிறது.. தனித்து நின்றாலும் ஒரே கொள்கையில் நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+