மேட்டுர் அணை கட்டவே 4 கோடி செலவு.. விஜய் வந்ததுக்கு 5 கொடி செலவு! நயினார் நாகேந்திரன் நச் கமெண்ட்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அந்த காலத்தில் நான்கு கோடி ரூபாய் தான் செலவாகியுள்ளது. ஆனால் தற்போது மேட்டூர் அணையை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய், 5 கோடி ரூபாய் செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார். மிக காஸ்ட்லி முதலமைச்சராக அவர் உள்ளார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் குறித்த பயிலரங்கம் திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Nainar Nagendran Vijay Mettur Dam

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த பயிலரங்கில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

பாஜக ஆலோசனை

நிகழ்ச்சி தொடங்கும் போது தேசிய கீதம் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நயினார் நாகேந்திரன்

மேலும், இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்," மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அந்த காலத்தில் நான்கு கோடி ரூபாய் தான் செலவாகியுள்ளது.

மேட்டூர் அணை

ஆனால் தற்போது மேட்டூர் அணையை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய், 5 கோடி ரூபாய் செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார். மிக காஸ்ட்லி முதலமைச்சராக அவர் உள்ளார். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில் காவிரி நீர் கடை மடைவரை சென்று சேருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிரதமராவதற்கு ராகுல் காந்திக்கு தகுதி உள்ளதா விஜய்க்கு தகுதி உள்ளதா என்பது இரண்டாவது விஷயம்.

பிரதமர் வேட்பாளர்

கூட்டணியில் உள்ள இவர்களுக்கு உள்ளாகவே யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. இவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள். சட்டமன்ற நேரலையை மக்கள் ரசித்து கொண்டிருப்பதாக த.வெ.க அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+