சுஜித் படத்துக்கு பதில் நித்தீஷ்.. உயிரோடு இருக்கும் குழந்தையின் படம் வைரலால் பெற்றோர் வேதனை!
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் புகைப்படத்துக்கு பதிலாக நித்திஷ் என்ற குழந்தையின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை அவரது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
அந்த குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒப்படைப்பு
இந்த நிலையில் சிறுவனை நேற்று முன் தினம் அதிகாலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். அந்த குழந்தையின் உடல் அழுகி சிதிலமடைந்திருப்பதால் உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுஜித்துக்கு பதில் வேறு படம்
இதையடுத்து பாத்திமாபுதூரில் குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் சுஜித்துக்கு பதிலாக வேறு ஒரு சிறுவனின் டிக்டாக் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன.

சமூகவலைதளம்
வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தை அடுத்த கொல்லமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் முனிவேல். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தை டிக் டாக்கில் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

கண்ணீர்
இதனால் நித்தீஷின் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். மேலும் உயிரோடு இருக்கும் தங்கள் மகனின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவது வருத்தம் அளிப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications