என்னங்கப்பா இது.. "நித்தி செம ஜாலி.. நோ சூடு நோ சொரணை.. ரொம்ப பிடிச்சிருக்கு".. லால்குடியில் கலகல!
திருச்சி: "நோ சூடு நோ சொரணை'ன்னு சொன்னாரு பாருங்க.. அதான்.. அதுதான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நாங்களும் அப்படித்தான். எங்களுக்கும் சூடு சொரணை கிடையாது.. செம ஜாலி டைப் தெரியுமா அவரு.. எதை பத்தியும் கவலைப்பட மாட்டாரு" என்று நித்யானந்தாவை புகழ்ந்து தள்ளுகிறார்கள் லால்குடி இளசுகள்!!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து உள்ளது பல்லவபுரம் என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் இளவரசன்.. இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருந்தனர்.
மணப்பெண் பெயர் விஜி.. நேற்றுதான் கல்யாணம். தம்பதி மணமக்கள் இருவருமே லால்குடியை சேர்ந்தவர்கள் என்பதால், கல்யாணமும் அங்குதான் நடந்தது.

மணமக்கள்
இந்த திருமணத்தில் ஹைலைட்டே.. இவர்கள் வைத்திருந்த பேனர்கள்தான்.. பொதுவாக மணமக்களை வாழ்த்தி பேனர் வைக்கும்போது, அதில் உறவினர்கள், அல்லது நண்பர்கள் படம், பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.. ஒருவேளை கட்சி சம்பந்தப்பட்டவர் திருமணம் என்றால் நிர்வாகிகள் பெயர்கள், போட்டோக்களும், அல்லது நடிகர்களின் போட்டோக்களும் இடம்பெற்றிருக்கும்.

பளிச் சிரிப்பு
ஆனால் இந்த கல்யாணத்தில் உறவுகள், நண்பர்களைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தது நம்ம நித்யானந்தாதான். பிளக்ஸ் பேனரில் நித்தியானந்தா போட்டோ இருந்தது.. வழக்கமான அதே சிரிப்பில்தான் உடம்பெல்லாம் நகையுடன் காணப்பட்டார் சாமியார் நித்தி.. பக்கத்துலயே பளிச்சென அந்த வாசகம்.. ‘நோ சூடு நோ சொரணை'!!!

வைரல் பேனர்கள்
கல்யாணத்துக்கு வந்தவர்கள், பொண்ணு, மாப்பிள்ளையைவிட இந்த பிளக்ஸ் பேனரைதான் ஆவென பார்த்து கொண்டு நகர்ந்தனர்.. இது நண்பர்களின் ஐடியா போலும்.. இதை பற்றி பேனர் வைத்தவர்களிடமே கேட்டதற்கு, "நித்தியானந்தாதான் இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.. ஃபேஸ்புக், சோஷியல் மீடியா முழுசும் இவர் வீடியோதான் வைரலாகிறது.

ரொம்ப பிடிச்சிருக்கு
அதனால்தான் அவருடைய போட்டோவை வைத்து பேனர் அடிச்சோம்.. நித்தியானந்தா வித்தியாசமா இருக்கிறார்.. அவர் பேச்சு வித்தியாசமாக இருக்கு.. அவரை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எதை பத்தியும் கவலைப்படாதவர்.. ஜாலியா இருக்கார்.. அவர் கொள்கை எங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்ன தோணுதோ அதைதான் பேசுவாரு.. முக்கியமா நோ சூடு, நோ சொரணைன்னு சொன்னாரு பாருங்க.. அதுதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு.

கிளம்பிடுவோம்
அப்படித்தான் நாங்களும்.. எங்களை யார் என்ன சொன்னாலும், திட்டினாலும் கண்டுக்கவே மாட்டோம்.. அவர் கைலாசத்தில் இருக்கிறார்ன்னு சொல்றார், ஆனா அது எங்கே இருக்குன்னுதான் தெரியல.. தெரிந்தால் நாங்களும் கிளம்பிடுவோம்.. அப்படி ஒரு நாடு இருக்குன்னா, அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த போஸ்டர் அடித்தோம்" என்கிறார்கள்.
ரைட்டு... முத்திடுத்து... கலி முத்தி போயிடுத்து!!!
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications