இது எனக்கு தேவையில்லாத வேலை; ரொம்ப ஃபீல் பண்றேன்; புலம்பும் பாரிவேந்தர்!
திருச்சி: அரசியலுக்கு ஏன் வந்தோம் என நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக புலம்பியிருக்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.ஆம். பல்கலைக்கழகத்தின் அதிபருமான பாரிவேந்தர்.
இனி எந்த தேர்தலிலும் கூட்டணி வைக்கக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்திருக்கிறார்.
மிகவும் நொந்துபோன மனநிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

பச்சைமுத்து
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அதிபரான பச்சைமுத்து என்ற பாரிவேந்தர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். இதையடுத்து தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், அது எதிர்பார்த்த வகையில் கைகொடுக்காததால் பாஜக, திமுக என கூட்டணி வைக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இப்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

தொகுதிப்பக்கம்
பாரிவேந்தரின் உடல்நலமும் வயதும் அவரை பயணம் செய்ய விடாமல் தடுத்ததால் பெரம்பலூர் தொகுதிப்பக்கம் வருவதையே அவர் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இது தொடர்பான சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து, தனது பிரதிநிதியாக தன்னுடன் எப்போதும் இருக்கும் ஜெயசீலனை தொகுதிக்கு அனுப்பி வைத்து அதிகாரிகளிடம் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

வருத்தம்
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், அரசியலுக்கு ஏன் வந்தேன் என நினைத்து வருதப்படுகிறேன் என மனம் நொந்த நிலையில் புலம்பியிருக்கிறார். மேலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் அவர், இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றால் நிச்சயம் உயர்கல்வித்துறையை மனதில் வைத்து தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணி கிடையாது
மேலும் திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை எனத் தெரிவித்தார். இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது என உறுதியளித்த அவர், இவர்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்களோடு கூட்டணி வைத்தால் இவர்கள் கோபப்படுகிறார்கள் என மனதில் உள்ளதை மறைக்காமல் போட்டுடைத்தார். பாரிவேந்தர் அவர்கள், இவர்கள் என குறிப்பிட்டது மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் கருத்தில் கொண்டு தான் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜெய்பீம் படம்
இதனிடையே ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் காலண்டரை வைத்து அரசியல் செய்வதாகவும் அவர்களுக்கு வேறு பிரச்சனை கிடைக்காததால் இதை கையில் எடுத்துள்ளதாகவும் பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர பாமகவை வாய்தவறியும் குறிப்பிடவில்லை. ஏரி குளங்களை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2015-ம் ஆண்டு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் காரணமாக ஐ.ஜே.கே. -பாமக இடையே ஏற்கனவே அரசியல் பகை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications