பல்லாயிரம் பேர்.. அதிர்ந்த பறை.. திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி!

நேற்று திருச்சியில் நடந்த கருஞ்சட்டை பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி!-வீடியோ

    திருச்சி: நேற்று திருச்சியில் நடந்த கருஞ்சட்டை பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பேரணி மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

    இன்று பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரியாரின் 45வது நினைவு நாள் ஆகும் இது. இதையடுத்து பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இதற்காக நேற்று திருச்சியில் பெரிய பேரணி நடந்தது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்ககம் சார்பில் இந்த பேரணி நேற்று நடைபெற்றது.

    ஒன்றாக சேர்ந்தனர்

    தேர்தலில் கலந்து கொள்ளாத கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த பேரணியை நடத்தியது. திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். உறையூர் சாலையில் தொடங்கிய பேரணி தென்னூர் உழவர் சந்தை வரை நீண்டு சென்றது.

    காரணம் என்ன

    பெரியாரின் நினைவு தினம் இன்று என்பதால் அவரை நினைவு கூரும் வகையில் நேற்று பேரணி நடந்தது. அதேபோல் தமிழகத்தில் உரிமையை மீட்டு எடுக்கவும், சமத்துவத்தை நிலைநாட்டவும், பாசிசத்திற்கு எதிராகவும் இந்த பேரணி நடந்ததாக பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பெரும் முழக்கம்

    இதில் கலந்து கொண்ட எல்லோரும் கருப்பு உடையில் வந்து இருந்தனர். அதேபோல் கணிசமான இளைஞர்கள் கையில் பறை வைத்து இருந்தனர். இவர்கள் பறை இசைத்துக் கொண்டே பேரணி சென்றது பெரும் கவனம் ஈர்த்தது. பறை இசையால் நேற்று திருச்சியே அதிர்ந்தது.

    அள்ளிய கூட்டம்

    இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 160 அமைப்புகள் இந்த பேரணியில் கலந்து கொண்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+