எனது தமிழ் குடும்பமே.. 20 ஆயிரம் கோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.. திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு
திருச்சி: திருச்சியில் 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது வணக்கம் எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார்.
திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழில் பேசி உரையை தொடர்ந்து. தொடர்ந்து மோடி கூறியதாவது:- 25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சிவி ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது.

2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கங்கப்பட்டுள்ளன. 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.
கனமழை காரணமாக நமது சக மக்களை இழக்க வேண்டியிருந்தது. சொத்துக்கள், உடைமகள் என இழப்பு கணிசமாக இருந்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியான நிலையிலே தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு துணையாக உள்ளது. அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பாக நாம் விஜயகாந்தை இழந்திருக்கிறோம்.
அவர் சினிமா உலகின் கேப்டன் மட்டும் அல்ல. அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். சினிமாவின் உதவியோடு அவர் மக்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். ஒரு அரசியல்வாதி என்ற முறையிலே அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்.
உலகில் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ் மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம். தமிழ் மொழி கலாசாரம், மொழி தொடர்பான உற்சாகம் அதிகரித்துள்ளது. பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது. 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. மேக் இன் இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் 400 முறை பயணம். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications