நிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி... லால்குடி அருகே சோகம்
திருச்சி: லால்குடி அருகே நிமோனியா காய்ச்சலுக்கு 2 ம் வகுப்பு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி டிரைவர். இவருடைய மகள் லக்சிகா (7). இருங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லக்சிகா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த செவ்வாய்க்கிழமை லக்சிகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு ரத்த பரிசோதனை செய்ததில் லக்சிகா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லக்சிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தச்சன்குறிச்சியில் கடந்த வாரம் பெய்த மழையினால் கீழத்தெரு, தேர்முட்டித் தெரு, வடக்கு தெரு, கீழ மாரியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இங்கு உற்பத்தியான கொசுக்கள் கடித்ததில்தான் லக்சிகா பலியானார் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications