திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை!
திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் அல்வா பொட்டலங்கள் இருந்தன.
பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

மர்ம பை
மேலும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 2-வது நடைமேடையில் தண்டவாளத்தில் ஒரு மர்ம பை கிடந்தது.

பாதுகாப்பு படை
இதனை அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் கண்டனர். அவர்கள் இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பையை சோதனையிட்டனர்.

பொட்டலங்கள்
இதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பையை திறந்து பார்வையிட்டனர். அதில் துணிகள் மற்றும் அல்வா பொட்டலங்கள் இருந்தன.

செல்போன் எண்
மேலும் ஆதார் அட்டை ஒன்றும் இருந்தது. அதில் தஞ்சாவூரை சேர்ந்த அய்யம்பெருமாள் என்ற பெயர் இருந்ததை கண்டனர். அந்த அட்டையில் இருந்த செல்போன் எண்ணிற்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அய்யம்பெருமாள்
இதில் மறுமுனையில் பேசிய நபர், அய்யம்பெருமாளின் மனைவி என்று தெரிவித்துள்ளார். மேலும், அய்யம்பெருமாள் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும், அவர் ரயிலில் தஞ்சாவூருக்கு பயணித்ததும், பயணத்தின்போது அவர் பையை தவறவிட்டதும் தெரியவந்தது.

தண்டவாளம்
இதைத்தொடர்ந்து அவரை திருச்சி வந்து பையை வாங்கி செல்லுமாறு ரயில்வே பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். இதற்கிடையே தண்டவாளத்தில் மர்ம பை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊடுருவுதல்
ஏற்கெனவே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தீவிர சோதனை நடந்து வருகிற நிலையில், மர்ம பை கிடந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications