பெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை... சஸ்பெண்ட்!
பெண் போலீஸ் புவனேஸ்வரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
திருச்சி: பெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில், கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை.. வீட்டிலேயே ஒரு கஞ்சா வியாபாரியை பதுக்கி வைத்ததால்தான், பெண் போலீஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புவனேஸ்வரி. இவர் திருச்சி பீமநகரில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இவருடைய வீட்டில் கஞ்சா வியாபாரி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தங்கி இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தம்பி ஏற்கனவே கஞ்சா வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும்அவருடைய வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.
பின்னர் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் இருந்து திருச்சி மாநகரத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்தே உத்தரவிட்டு விட்டார். மேலும் தங்கி இருக்கும் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் காலி செய்ய புவனேஸ்வரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications