“குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது.. எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா”.. திருச்சியில் பரபர போஸ்டர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம்.. எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா" என திருச்சி உறையூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து வரும் நிலையில் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதில், "தவெக முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம். 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம் எங்களை மறந்து விட்டாயே. கட்சி மாநாட்டிலும், பொது கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே. கரூர் குடும்பத்திற்கு தத்து பிள்ளையாக இருப்பதாக கூறியுள்ளீர்கள். எங்கள் குடும்பம் மட்டும் நடு ரோட்டில் கிடப்பதா?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

TVK karur high court

கடந்த ஆண்டு அக்டோபரில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள திருச்சி மாவட்டத்திலிருந்து பயணமான வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகியோர் பயணத்தின் போது நடந்த துயர விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் விஜய் ரசிகர்களாக பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் திருச்சி நகரின் பல பகுதிகளில் "முதலாம் ஆண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் நடிகர் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உயர்நீத்தோம், எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா. 15 ஆண்டு காலமாக உங்களின் பின்னால் அணிவகுத்தோம்.. ஆனால் கட்சி மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் ஒரு வார்த்தை இரங்கலும் தெரிவிக்கவில்லை. எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா.

முதல் சுற்றுப் பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே.. விஜய் அண்ணா.. அப்போது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியை பெற்றீர்களே.. அப்போது கூட மறந்துவிட்டாயே அண்ணா.. கரூர் துயர சம்பவத்தில் தத்துப் பிள்ளையாக இருப்பேன் என்றீர்கள்; ஆனால் எங்கள் குடும்பம் நடுரோட்டில் கிடப்பதா? என வருத்தம் கலந்த வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+