Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் காரில் அலறிய கீதா.. நடுங்கி போன மக்கள்.. கர்ப்பிணியை கடத்தியது யார்.. பரபரத்த லால்குடி

லால்குடியில் கர்ப்பிணி மகளை கடத்திய பெற்றோர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஓடும் காரில் கதறிய கீதாவின் அலறல் சத்தம் பொதுமக்களை நடுங்க வைத்தது.. கர்ப்பிணியை கடத்தி சென்றது கீதாவின் அம்மாவும், அப்பாவும்தான்.. இந்த சம்பவம் லால்குடியில் பரபரப்பை தந்துள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவர் ஹரிஹரன்.. இவருக்கு 24 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவர் கீதா சோப்ரா என்பவரை காதலித்தார்.. கீதாவுக்கு 19 வயதாகிறது.. மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கீதா.

 pregnant daughter kidnapped by her parents including and six arrested near trichy

2 பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய், கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கல்யாணம் செய்து கொண்டனர்.. பிறகு லால்குடி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.. 2 குடும்பத்தையும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு கீதாவை ஹரிஹரன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இப்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் கீதா.

நேற்று வீட்டில் இவர் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடுதிப்பென ஒரு கும்பல் உள்ளே நுழைந்து காரில் கீதாவை கடத்தி கொண்டு போய்விட்டது.. இதனால் பதறிப்போன ஹரிஹரன் லால்குடி போலீசில் புகார் தந்தார். இதையடுத்து போலீசாரும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்ததில் கீதாவை அவரது அப்பா, அம்மாவே கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த காரை துரத்தி கொண்டு சென்றனர்.. துவரங்குறிச்சி செக்போஸ்ட்டை தாண்டி அந்த கார் செல்ல முயன்றபோது, ரோந்து போலீசார் அதனை மடக்கி பிடித்துவிட்டனர்.. பிறகு கீதாவை கடத்திய அந்த கும்பலையும் பிடித்து விசாரணை செய்தனர்.

கீதாவை கடத்திய தந்தை மாரிராஜன் 57, தாய் விஜயகுமாரி 43, அவரது உறவினர்கள் கார்த்திக் 21, குமரேசன் 22, கார் டிரைவர் தினேஷ் 23, உடையன்னசாமி 48, ஆகியோர்தான் கீதாவை கடத்தியது தெரியவந்தது. ஹரிஹரனை கல்யாணம் செய்தது இவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.. அதனால்தான் மகளை கடத்தி கொண்டு போய்விடலாம் என்று முடிவு செய்ததாக போலீசில் சொன்னார்கள். தற்போது 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+