திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்த பொறியியல் நண்பர்கள்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த ராயல் சிவில் டிரஸ்ட் என்ற அமைப்பு கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்.

திருச்சியில் சிவில் என்ஜீனியரிங் படிப்பை முடித்த நண்பர்கள் குழு சமீபத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடி மகிழ்ந்தனர். அப்போது ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ராயல் சிவில் டிரஸ்ட். இந்த Trust மூலமாக எழை எளியோருக்கு எண்ணற்ற உதவிகள் செய்து வருகின்றனர்.

royal civil trust helps villagers

தற்போது நிலவும் கொரோனா சூழலைத் தொடர்ந்து திருச்சியில் 2 ஊர்களைத் தேர்வு செய்து அங்கு வசிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றதைச் செய்துள்ளன். 100 குடும்பகளுகு இந்த உதவிகள் செய்தனர்.

royal civil trust helps villagers

கூலி தொழிலாளர்கள், அன்றாடம் உழைத்து நாளை கடத்த கூடிய மக்கள் மிகப் சிரமத்துக்குள்ளாகியுள்ளானர்.எ னவே தங்களது Royal civil Trust மூலமாக திருச்சி அரயமங்கலம் மற்றும் திருவெறும்பூர் அருகில் உள்ள குமரேசபுரம் பகுதியில் மிகவும் ஏழ்மையிலுள்ள 100 குடும்பங்களுக்கு மளிகைத் தொகுப்பை அளித்துள்ளனர்.

royal civil trust helps villagers

அதன்படி ரூ. 400 மதிப்புள்ள இந்தத் தொகுப்பில்,

அரிசி 5 Kg
மளிகை பொருட்கள்
எண்ணெய் 500 ml
து. பருப்பு 500 gm
மஞ்சள் தூள் 100 gm
மிளகாய் தூள் 100gm
உப்பு 1 Pkt
மற்றும் காய்கறிகளுடன் வழங்கியுள்ளனர்.

royal civil trust helps villagers

தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வரும் இந்த இளைஞர் பட்டாளம், படிப்புச் செலவுக்கு சிரமப்படும் பல ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

royal civil trust helps villagers

படிப்பை முடித்து அனைவரும் திருமணமாகி பல்வேறு ஊர்களில் குடும்பம் மற்றும் வேலை நிமித்தம் பிரிந்து கிடந்தாலும் கூட, மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அவ்வப்போது இது போல செய்து வருவது பாராட்டுக்குரியது.

செய்தி, படங்கள் : திவ்யா தங்கவேல்

English summary
Trichy based Royal Civil Trust has helped two villages due to the Coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X