ஏம்பா.. பல்லு தேய்க்கிற பேஸ்ட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.. 6 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்!
கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி: என்னதான் டிசைன் டிசைனா தங்கம் கடத்தி வந்தாலும், நம் ஏர்போர்ட் அதிகாரிகள் கடத்தல்காரர்களை வளைச்சு வளைச்சு பிடித்து கைது செய்து வருகிறார்கள்.
எவ்வளவுதான் தமிழக ஏர்போர்ட்களில் அதிகாரிகள் படு கண்டிப்பாக இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிகாரிகளும் இவர்களை வளைச்சு வளைச்சு கைது செய்து, ஜெயிலில் அடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருச்சி ஏர்போர்ட்
நேற்றுகூட தங்கம் கடத்தியவர்கள் திருச்சி ஏர்போர்ட்டில் வசமாக மாட்டி கொண்டுள்ளார்கள். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேத்து ராத்திரி 10 மணிக்கு ஏர் ஏசியா விமானம் திருச்சி ஏர்போர்ட் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.

6 பேர்
அப்போது 6 பேர் மீது மட்டும் பலமாக டவுட் வந்தது. அதனால் அவர்களிடம் சோதனையும் பலமானது. தூத்துக்குடியைச் சேர்ந்த நியாஸ், சென்னையை சேர்ந்த சல்மான்கான், ரியாஸ்கான், லியாக்கத் அலி, அமான்அலிகான் மற்றும் இளையான்குடியைச் சேர்ந்த ரசூலுதீன் ஆகியோர்தான் அந்த 6 பேர்.

தங்க துகள்கள்
இவர்கள் அணிந்திருந்த பேண்ட்களில் டூத் பேஸ்ட் இருந்தது. பேஸ்ட்டை எதுக்கு பேன்ட்டில் வைத்து வர வேண்டும் என்ற சந்தேகம் எழுந்ததால், தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான், அந்த பேஸ்ட்டில் தங்க துகள்களை கலந்து மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

6 பேர் கைது
மொத்த எடை 2,430 கிராம் இருந்ததாம். அந்த பேஸ்ட்டில் இருந்து தங்கத்தை உருக்கி தனியாக பிரித்து எடுத்தார்கள். அந்த பேஸ்ட்கூட சங்கிலி வடிவிலும், கட்டி வடிவிலும் டிசைன் டிசைனாக இருந்ததாம். 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,317 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து 6 பேரையும் அள்ளிக் கொண்டு போனார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications