நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு தெரியுமா? அண்ணன் சத்தியநாராயணன் போட்டுடைத்த உண்மை!
திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தருவார் என்பது குறித்து அவரது சொந்த அண்ணன் சத்தியநாராயண ராவ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் நேரடியாக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சத்திய நாராயணராவ் வந்து ஜெயிலர் படம் பார்த்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினிக்கு மட்டுமே மக்கள் அளித்தது என பெருமிதம் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் இருக்கும்வரை அந்த பட்டம் வேறு யாருக்கும் கிடையாது என்று தம்பியின் புகழ் புராணம் பாடிய அவர் இன்னும் நிறைய படங்களில் அவர் நடிக்க இருக்கிறார் என்றும் திரை உலகை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களுக்காக ரஜினி தொடர்ந்து நடிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்றும் ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார் எனவும் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று கூறிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications