• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திருச்சியில் தொடரும் திமுக ஆதிக்கம்.. கடும் போட்டி அதிமுக.. சத்தியம் கருத்துக்கணிப்பு

|

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளை திமுக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளதாகச் சத்தியம் டிவி கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில் சத்தியம் தொலைக்காட்சி இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மையத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் இந்த முறை கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் திமுக 5 இடங்களைக் கைப்பற்றும் என்று சத்தியம் டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

அமைச்சர் தொகுதியில் என்ன நிலை

அமைச்சர் தொகுதியில் என்ன நிலை

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக- 28% வாக்குகளையும் திமுக- 23% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு அமமுக-14%, நாம் தமிழர்- 13%; மநீம-12% வாக்குகள் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இழுபறி தொகுதியாகச் சத்தியம் சர்வே கூறியுள்ளது.

மாஸ் காட்டும் கே.என் நேரு

மாஸ் காட்டும் கே.என் நேரு

திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.என் நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக 47% வாக்குகளையும் அதிமுக 17% வாக்குகளையும் பெறும். அதேபோல மநீம- 13% வாக்குகளைப் பெற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக 25% வாக்குகளையும் திமுக- 20% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் & துறையூர்

திருவெறும்பூர் & துறையூர்

அதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதியில் திமுக- 33%; அதிமுக- 28%; வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல துறையூர் தொகுதியில் திமுக 30%; வாக்குகளையும் அதிமுக- 26% வாக்குகளையும் பெறும் என்று சத்தியம் தொலைகாடச்சி தெரிவித்துள்ளது.

லால்குடி, முசிறி, ஸ்ரீரங்கம்

லால்குடி, முசிறி, ஸ்ரீரங்கம்

லால்குடி தொகுதியில் திமுக 34% வாக்குகளையும் அதிமுக 24% வாக்குகளையும் பெறும் என்று சத்தியம் டிவி தெரிவித்துள்ளது. மணப்பாறை தொகுதியில் திமுக 40% வாக்குகளையும் அதிமுக 32% வாக்குகளைப் பெறும். முசிறி சட்டசபை தொகுதியில் திமுக 35% வாக்குகளையும் அதிமுக 31% வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வலுவாக இருக்கும் ஶ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக 36% மற்றும் திமுக 32% வாக்குகளைப் பெறும் என்று சத்தியம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முந்துவது யார்

முந்துவது யார்

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திமுக ஐந்து இடங்களிலும் அதிமுக மூன்று இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகச் சத்தியம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதேபோல ஒரு தொகுதி இழுபறியில் உள்ளது. திருச்சியில் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பிருப்பதாக சில கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சத்தியம் டிவி திமுகவே அதிக இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
English summary
DMK's stronghold in Trichy will continue says Satyam tv opinion poll.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X