உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. !
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி ஆசிரியை புகார் மனு அளித்துள்ளார்
திருச்சி: "உன்னை முழுசா கேமிராவில் படம் பிடிச்சிட்டேன்.. அதனால கல்யாணம் பண்ணிக்க நீ என்கிட்ட கெஞ்சணும்" என்று கணக்கு டீச்சரை இளைஞர் ஒருவர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார் ஒரு பெண். வயசு 29 ஆகிறது. புதுக்கோட்டையில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் கணக்கு டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இன்று கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கணக்கு டீச்சர் கலந்து கொண்டதுடன், அதிகாரிகளிடம் ஒரு மனுவும் அளித்தார்.
அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் இதுதான்: "எனக்கு பெற்றோர் இல்ல. நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தேன். அதற்காக கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
கல்யாணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். பின்னர் அவர் என்னை டவுன்ஹால் ரோட்டில் ஒரு குவார்ட்டஸில் குடி வைத்தார். ஒருநாள் எதேச்சையாக வீட்டின் ஜன்னலில் பார்த்தால், ஒரு கேமிரா இருந்தது. அதிர்ச்சியடைந்த நான் இதை பற்றி காதலனிடம் கேட்டேன்.
அதற்கு "உன்னை நான் முழுசாக படம் பிடிச்சிட்டேன். என்கிட்ட நீ மன்னிப்பு கேட்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள கெஞ்சவும் வேண்டும். அப்படி செய்யவில்லையானால் ரகசிய கேமிராவில் உள்ளதை எல்லாம் இணையத்தில் போட்டுவிடுவேன்" என்று மிரட்டுகிறார்.
போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை இல்லை, அதனால் இளைஞர் மீது நடவடிக்கை வேண்டும்" என்று கூறியிருந்தார். இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications