திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது! நாங்களாக சிந்திச்சி வாக்களிக்கணுமா.. அப்ப தலைவன்னு நீங்க எதற்கு?.. சீமான் பொளேர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha elections 2019 | எனது படம், பெயர், மன்றக் கொடியை பயன்படுத்தக் கூடாது: ரஜினி

    திருச்சி: நாங்களாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றால் அப்ப தலைவன் என்பவர் எதற்கு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகிவிட்டனர்.

    இது எப்போதும் மன்னிக்க முடியாத செயலாகும். அவர்களின் தேவை, நோக்கம் என்னவென்று தெரியவில்லை. 350 கிலோ வெடிமருந்தை ஏற்றிக் கொண்டு அந்த வாகனம் வரும் வரை சோதனை சாவடிகள் இருந்ததா இல்லையா? உளவு கட்டமைப்பு நமது நாட்டில் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

    லஞ்சம்தானே

    லஞ்சம்தானே

    நாட்டில் உள்ள மக்களுக்குதான் பாதுகாப்பு இல்லை என்றால் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுவும் ஒரு வித லஞ்சம்தான். விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கட்சி ஆரம்பிக்கவில்லை

    கட்சி ஆரம்பிக்கவில்லை

    இதனால் என் தேசம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மற்று்ம சட்டசபை தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார்.

    முக்கிய முடிவு

    முக்கிய முடிவு

    "நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு சிந்தித்து வாக்களியுங்கள்" என்று ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவை அறிவித்துள்ளது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

    நீங்கள் எதற்கு?

    நீங்கள் எதற்கு?

    அதற்கு சீமான் கூறுகையில் தலைவன் என்பவன்தான் வழிகாட்டி. நீங்களாக பார்த்து ஓட்டு போடுங்கள் என்று கூறுவதற்கு தலைவன் எதற்கு. இந்த கட்சி உங்கள் பிரச்சினையை தீர்க்கும், இவர்களுக்கு வாக்களியுங்கள் என்றுதானே அவர் கூறியிருக்க வேண்டும். சரி சட்டசபை தேர்தலுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்போம் என்றார் சீமான்.

    English summary
    Naam Tamilar Organiser Seeman says that Chief has to guide the cadres to whom to vote?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X