ஆமா பெரிய கொம்பாதி கொம்பர்.. ஏன் குதிக்கிற.. என்னைமாதிரி நிற்க முடியுமா?- அண்ணாமலையை விளாசிய சீமான்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு எழுதச் சொல்பவர்கள் முதலில் தேர்வு எழுத வேண்டும் என்றும் மோடி, அமித்ஷா என எல்லோரும் தேர்வு எழுதிவிட்டு ஆட்சிக்கு வரட்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில், மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கில் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித் சந்தித்துப் பேசிய சீமான், பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கும் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.

 இதுதான் அருமையான சட்டம் ஒழுங்கு

இதுதான் அருமையான சட்டம் ஒழுங்கு

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், "சவுக்கு சங்கர், மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத் போன்றோர் திமுகவை எதிர்த்து பேசுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? அவர்களுக்கு என்று கருத்துகள், பார்வைகள் இருக்கும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாங்கள் ஜனநாயகத்தின் காவலர்கள், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறீர்ளே.. சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனாலும், முதல்வர் நாட்டில் சட்டம் ஒழுங்கு அருமையாக இருக்கிறது என்கிறார்.

எதிர்வினை இருக்கு ராஜா

எதிர்வினை இருக்கு ராஜா

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள கற்றுக் கொள்வது தான் ஜனநாயகம். சவுக்கு சங்கர் ஒரு கருத்து சொல்கிறார் என்றால், நீங்கள் தான் நிறைய சங்கரை வைத்திருக்கிறீர்களே. அவருக்கு எதிராக ஒரு கருத்து சொல்லுங்கள். அதை விட்டுட்டு தூக்கி கைது செய்து உள்ளே போடுவேன் என்றால் என்ன அர்த்தம்? எந்த வினைக்கும் எதிர்வினை இருக்கு ராஜா. இந்த உலகத்தில் எதுவும் நிலைத்து இருந்ததில்லை.

 மோடி பிரஸ் மீட்

மோடி பிரஸ் மீட்

பேரறிவாளன் விடுதலையை கொண்டாட வேண்டாம் எனச் சொல்லும் அண்ணாமலை, அமித்ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என இதே நாட்டின் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எப்படி பார்க்கிறார்? பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னைப் போல ஒரு முறையாவது மோடியை ஊடகவியலாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நீரவ் மோடி சொன்னதற்கு பதில்

நீரவ் மோடி சொன்னதற்கு பதில்

லஞ்சம் ஊழலைப் பற்றி பேசும் பா.ஜ.க, ரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் என்ன பதில் சொல்லும்? கோப்புகள் காணாமல் போய்விட்டன என்று கூறிய நீங்கள் நாட்டை எப்படி பாதுகாப்பீர்கள்? பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சாதித்தது என்ன? தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்று சொன்னீர்கள். அப்படியென்றால் புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது எனச் சொல்லுங்கள். 500 கோடி கைமாறிய பிறகு தான் என்னை பாஜக அரசு விடுவித்தது என்று நீரவ் மோடி சொன்னாரே.. அதற்கு பதில் என்ன?

பரீட்சை எழுதுங்க

பரீட்சை எழுதுங்க

எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு எழுதச் சொல்பவர்கள்தான் முதலில் தேர்வு எழுத வேண்டும். இந்த நாட்டில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவலர்கள் என தேர்வு வைத்துத்தானே எல்லாரையும் தேர்ந்தெடுக்கிறோம். அவர்களை எல்லாம் நிர்வாகம் செய்யும் தலைவன் என்ன தேர்வு எழுதுகிறான்? எல்லாவற்றிற்கும் தேர்வு எழுதச் சொல்லும் நீங்கள் ஏன் ஒரு தேர்வையும் எழுதுவதில்லை? மோடி, அமித்ஷா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தேர்வு எழுதட்டும்.

தகுதியான ஆள்

தகுதியான ஆள்

கல்வி, மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், வரலாறு, வேளாண்மை, உலக வரலாறு, உலக அரசியல் சேர்த்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் தேர்வை நடத்தி எவர் தேர்ச்சி பெற்று வருகிறாரோ அவரிடம் நாட்டை கொடுங்கள். அப்போதாவது நம்மை ஒரு அறிவார்ந்த பெருந்தகை, தகுதியான தலைவர் நாட்டை ஆள்கிறார் என நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

யார் முந்துறான்னு பார்ப்போமா?

யார் முந்துறான்னு பார்ப்போமா?

மேலும்,'தமிழகத்தில் பா.ஜ.க தான் மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே' என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "நீங்க அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். நீங்க பெரிய கொம்பாதி கொம்பர் தானே. 2024 தேர்தலில் ஒண்ணு ஸ்டாலின் பின்னாடி நிப்பீங்க, இல்லைன்னா எடப்பாடி பழனிசாமி பின்னாடி நிப்பீங்க. என் மரத்துக்குக் கீழ, என் நிழல்ல வளர்ற குட்டைச் செடி நீ.. அப்புறம் எதுக்கு குதிக்கிற. என்னை மாதிரி தனிச்சு போட்டியிடுங்க பார்ப்போம். தி.மு.க, அ.தி.மு.கவை விட்ருவோம். பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி தனியா போட்டியிடுவோம். யார் முந்துறான்னு பார்ப்போமா?" எனப் பதிலளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+