நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வார்களே ஒழிய.. ! இஸ்லாமியர்கள் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு
திருச்சி: இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னாலும் நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வாங்களே ஒழிய இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்திற்கே கருணாநிதி நாடு என பெயரை மாற்றிவிடலாம்.

கழிப்பிடம், குடிப்பிடத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் கருணாநிதி பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வேறு எந்த இடத்திற்கும் பெயர் வைக்க கருணாநிதியை தவிர தகுதி பெற்றவர்கள இல்லையா. ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? ஜல்லிக்கட்டு வளாகத்திற்கும் அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்கள் எனக்கு எப்போதுமே ஓட்டு போட்டதில்லை. இதை என் தலைவர் மீது ஆணையிட்டு சொல்கிறேன். இனியும் போடுவார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு ஓட்டு போடுவது என வைத்துள்ளார்கள்.
இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்றால் கூட நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வார்களே ஒழிய திமுகவுக்கு ஓட்டு போடாமல் இருக்க மாட்டார்கள். கேட்டால் நான் பாஜகவின் பி டீமாம். திமுக பாஜகவின் ஏ டீம் என்பதால்தான் என்னை பி டீம் என்கிறார்கள்.
அதிமுகவை கண்டு கூட திமுக அஞ்சுவதில்லை, ஆனால் என்னை பார்த்து திமுக பயப்படுகிறது. நாங்கள் ஓட்டு பிச்சை எடுப்பதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அவர் பிச்சி பிச்சி எடுக்கிறார். இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர ஆர்எஸ்எஸுக்கு ஒரு கொள்கை கோட்பாடு இருக்கா,
சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்குமாறு மத்திய அரசை அண்ணாமலை வலியுறுத்துவாரா என சீமான் கேள்வி எழுப்பினார். கோவை பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் சீமானும் திருமாவளவனும் கலந்து கொண்டு ஓட்டு பிச்சை வாங்குவதில் பிஎச்டி வாங்கியுள்ளனர் என அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications