முதல்முறையாக சட்டசபை செல்லும் சீமான்? காரைக்குடியில் வெற்றி வாய்ப்பு அதிகம்.. ஏன் தெரியுமா?
திருச்சி: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று திருச்சியில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாட்டில்' தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இந்த மாநாட்டில், தான் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என சரிபாதி இட ஒதுக்கீட்டை வேட்பாளர் பட்டியலில் அவர் உறுதி செய்துள்ளார்.

சீமான் எடுத்த முடிவு
சீமான் தனது தேர்தல் களத்தை வடசென்னையில் (திருவொற்றியூர்) இருந்து தென் தமிழகத்தின் காரைக்குடிக்கு மாற்றியிருப்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. காரைக்குடி தொகுதி செட்டிநாடு கலாச்சாரத்தின் மையப்புள்ளியாகவும், மண் சார்ந்த அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதியாகவும் உள்ளது. "தமிழ் தேசிய" அரசியலை முன்வைக்கும் சீமானுக்கு, தென் மாவட்டங்களில் நிலவும் ஆதரவை வாக்குகளாக மாற்ற காரைக்குடி ஒரு சிறந்த நுழைவுவாயிலாக அமையும். மேலும், இது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய கோட்டையாகக் கருதப்படுவதால், ஒரு தேசியக் கட்சியை நேரடியாக எதிர்த்துத் தனது வலிமையை நிரூபிக்க இது சரியான களம் என்று அவர் கருதுகிறார்.
நாம் தமிழர் வளர்ச்சி காரைக்குடி
கடந்த காலத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி சீராக இருந்துள்ளது. 2016-ல் வெறும் 2.65% வாக்குகளை (5,344 வாக்குகள்) மட்டுமே பெற்றிருந்த அக்கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் 11.24% வாக்குகளைப் (23,872 வாக்குகள்) பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி சுமார் 75,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், பாஜகவின் ஹெச். ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்போது சீமான் போன்ற ஒரு பெரும் ஆளுமை நேரடியாகக் களமிறங்கும்போது, இந்த வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
சீமானின் சொந்தத் தேர்தல் பயணமும் ஒவ்வொரு தேர்தலிலும் ஏறுமுகமாகவே இருந்துள்ளது. 2016-ல் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 12,497 வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2021-ல் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டபோது, சுமார் 48,597 வாக்குகளைப் (24.43%) பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். திராவிடக் கட்சிகளுக்கு இணையான ஒரு வாக்குப் சதவீதத்தை ஒரு தனிநபர் வேட்பாளராக அவர் எட்டியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
நாம் தமிழர் பிளான்
தற்போது திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மாற்றாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் (TVK) களத்தில் இருப்பதால், வாக்குகள் பலவாறாகப் பிரியும் சூழல் நிலவுகிறது. இத்தகைய மும்முனை அல்லது சதுரங்கப் போட்டியில், காரைக்குடி தொகுதியில் சீமான் பெறும் வெற்றி அல்லது வாக்குகளின் எண்ணிக்கை, தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக, தென் மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த சீமானுக்கு காரைக்குடி ஒரு பலமான அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கே திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் வலிமையாக இல்லாமல் இருப்பதும் சீமானுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications