பாஜக கொள்கை எதிரி என்றால்.. காங்கிரஸ் குறித்த விஜய்யின் நிலைப்பாடு என்ன? சீமான் அட்டாக்!
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினால், காங்கிரஸ் கட்சி குறித்த நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ், பாஜக இடையில் என்ன கொள்கை வித்தியாசம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய சீமான், விஜய் இன்னும் தனது கொள்கையை தெளிவாக கூற வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். தவெக தலைவர் விஜய் தங்களின் அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் விமர்சித்து வருகிறார். ஏற்கனவே தவெக தொண்டர்களை அணில் என்று கூறி வரும் சீமான், தற்போது விஜயின் கொள்கைகளை சாடி வருகிறார்.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் அந்த இயக்கத்தை தவறாக பேச மாட்டார்கள். விஜய் பாஜகவை தங்களின் கொள்கை எதிரி என்று கூறுகிறார். அப்போது காங்கிரஸ் கட்சி குறித்து விஜய்யின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது?
காங்கிரஸ், பாஜக இடையில் எந்த கொள்கை வேறுபாடும் இல்லை. திமுக மற்றும் அதிமுக இடையில் எந்த வித்தியாசமும் இல்லாததை போல், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலும் வித்தியாசம் கிடையாது. ஆர்எஸ்எஸ் என்ன நாட்டின் விடுதலை விரும்பியதா? அல்லது விடுதலைக்காக போராடியதா? விடுதலைக்கு ஆர்எஸ்எஸ் எத்தனை போராட்டங்களை நடத்தியது..
பாஜகவிடம் அதிகாரம் இருப்பது மிகவும் ஆபத்தானது. பெருமுதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதை விட நாட்டிற்கு இந்த கட்சிகள் செய்தது என்ன? தம்பி விஜய் தெளிவுபடுத்த வேண்டும். 2 மாநாட்டிலும் பாஜக கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறி இருக்கிறார். முதலில் தவெக கொள்கை என்ன? பாஜக ஏன் கொள்கை எதிரி என்று சொல்ல வேண்டும்..
நாம் தமிழருக்கு ஏன் பாஜக எதிரி என்றால், அமித்ஷா மதுரை வந்தபோது, இந்து மக்களின் ஒற்றுமை என்று பேசினார். அவர் இந்திய மக்களின் ஒற்றுமை என்று பேசி இருக்க வேண்டும். அதனால் அவர் எங்களின் கொள்கை எதிரி.. அவர்கள் சாமியை காப்பாற்ற போராடுவார்கள்.. நான் பூமியை காப்பாற்ற போராடுகிறேன்.. இதுதான் எங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள முரண்பாடு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications