ரயில் ரூட்டே மாறுது.. முக்கிய சேவைகள் ஜனவரியில் ரத்து! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
திருச்சி: பொறியியல் பணிகளின் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கான பல்வேறு ரயில்களின் சேவைகள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
ரயில் பெட்டிகள், எஞ்சின்கள், தண்டவாளங்களை பராமரிப்பதற்காகவும், சிக்கல்களை களைவதற்காகவும், பாதுகாப்பு ஆய்வுகள், பொறியியல் பணிகளுக்காகவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்காக ரயில் போக்குவரத்து சேவையில் சில காலம் மாற்றம் செய்வது, வேறு பாதைகளில் இயக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது முக்கிய ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் விடுத்து இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக பிரோஸ்பூா் - மண்டபம் இடையிலான 20973 என்ற எண் கொண்ட ஹம்சாபா் விரைவு ரயில் வரும் ஜனவரி 13 ஆம் தேதியும், மறு மாா்க்கமாக வரும் ஜனவரி 16 ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மன்னாா்குடி - பகத் கி கோத்தி இடையே இயக்கப்பட்டு வந்த அதி விரைவு ரயிலானது (எண்: 22674) வரும் ஜனவரி 8 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக வரும் ஜனவரி 11 ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பகுதி ரத்து: காரைக்குடி - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (எண்: 06888) வரும் ஜனவரி 9 ஆம் தேதி, ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (எண்: 16843) வரும் 19 ஆம் தேதி 120 நிமடங்களும், வரும் ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 26 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் 60 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும். ஈரோடு - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் முன் பதிவற்ற சிறப்பு ரயிலானது (06810) வரும் ஜனவரி 9 ஆம் தேதி, ஜனவரி 23 ஆம் தேதி, ஜனவரி 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நின்று செல்லும்." என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்து உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications