ராத்திரி நேரத்தில் ஒரே ஆபாச பேச்சு.. கொந்தளித்த பெண்கள்.. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்!
பாலியல் தொல்லை தந்த இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டது
திருச்சி: ராத்திரி ஆகிவிட்டால் போதும்.. பெண்களிடம் அசிங்க அசிங்கமாக போனில் பேச ஆரம்பித்துவிடுவார் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்.. கடைசியில் விஷயம் வெடித்து வெளியே தெரியவர, "வீட்டுக்கு போய்ட்டு வாங்க மிஸ்டர் மணிவண்ணன்" என்று சொல்லி மொத்தமாக அனுப்பி வைத்துவிட்டனர் போலீஸ் உயரதிகாரிகள்..!
திருச்சி மாவட்டம், சிறுகனூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வேலை பார்த்தவர் மணிவண்ணன்.. தன்னிடம் எந்த பெண்ணாவது புகார் அளிக்க வந்தால், முதல் வேலையாக அந்த பெண்ணின் போன் நம்பரை வாங்கி வைத்து கொள்வாராம்.. விசாரணை என்ற பெயரில் நைசாக செல்போனில் பேச தொடங்குவராம்.. ஒருகட்டத்தில் அந்த பேச்சு எல்லை மீறி போகும்.. அதுவும் ராத்திரியில்தான் விசாரணையை ஆரம்பிப்பாராம்..

யாரெல்லாம் தனக்கு ஒத்துழைக்கிறார்களோ, அந்த கேஸை அதிரடியாக விரைந்து வந்து முடித்து வைப்பாராம் மணிவண்ணன்.. சரியாக பேசாத பெண்களுக்கு பாலியல் தொல்லை தர ஆரம்பிப்பாராம்.. இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் என்றில்லை, பெண் போலீஸ்கள் சிலரிடம் கூட வேலையை காட்டி உள்ளார் இவர்.. இது சம்பந்தமான புகார்களும் உயரதிகாரிகளுக்கு சென்றிருக்கிறது.
இப்படித்தான் சமீபத்தில் சிறுகனூர் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் புகர் தர சென்றிருக்கிறார்.. அந்த பெண்ணிடமும் நம்பரை வாங்கி வைத்து கொண்டு நைட் நேரத்தில் அலப்பறை ஆரம்பித்திருக்கிறார்... அதுமட்டுமில்லை, புகார் சொன்ன நபர்களுக்கு சாதகமாக மணிவண்ணன் செயல்பட்டாராம்.
இதனால் சம்பந்தப்பட்ட பேண், நேரடியாக திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனிடம் அன்று புகார் தந்திருக்கிறார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டதில், உண்மை வெளியானது.. கடந்த 29-ம் தேதி மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் டிஜஜி பாலகிருஷ்ணன்.
இன்னும் 6 வருஷம் சர்வீஸ் இருக்கிறதாம் மணிவண்ணனுக்கு.. இந்த வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் தவமாய் காத்திருக்கிறார்கள்.. இந்நிலையில், நல்லபடியாக இந்த வேலையை பார்த்து, சர்வீஸை முடித்துவிட்டு போகாமல், இப்படி இந்த வயசில் அசிங்கப்பட்டு நிற்கிறார். மிஸ்டர் மணிவண்ணன்!
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications