மாரியம்மா நீயே கேளும்மா! கையில் காசு.. கண்ணுல சாமி! சமயபுரம் கோவிலில் புரோக்கர்கள் அட்ராசிட்டி!
திருச்சி: புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகவும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களிடம் பேரம் பேசி பணம் பறிப்பதாக அதிர்ச்சி தரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொடும். மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
சமயபுரம் மாரியம்மன் கோவில்:
இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தியும் வெளி மாநில சபரிமலை ஐயப்ப பக்தர்களை குறி வைத்தும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள்:
சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் தான் இவர்களது குறி. சுவாமி தரிசனத்திற்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் என பேரம் பேசி தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சிறப்பு தரிசனம்:
மேலும் இடைத்தரகர்களுக்கு கோவில் காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களை குறி வைத்து அவர்களை மடக்கி 200 ரூபாய் கொடுத்தால் நேரடியாக சுவாமி தரிசனம் அழைத்துச் செல்வதாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

பணம் கேட்டு தொல்லை:
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மோசடியின் பின்னணியில் கோவிலில் இருக்கும் அறநிலைய அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து பணம் கேட்டு தொந்தரவு செய்யும் நபர்களால் கோவிலுக்கு வரும் எண்ணமே போய்விடுகிறது என கூறும் பொது மக்கள் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உயிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை:
மேலும், மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்களில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சிறப்பு தரிசனம், கோவில் சார்பில் மரியாதை உள்ளிட்டவை அளிக்கக் கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் எப்படி இவர்கள் பணம் பறிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications