இறந்து போன அண்ணன்.. கட்டிப் பிடித்து அழுத மீனா.. கல்யாணமும் நின்று போனது.. திருச்சி அருகே சோகம்
அண்ணனின் திடீர் மரணத்தினால் தங்கை திருமணம் நின்றுபோனது
திருச்சி: இறந்து போன அண்ணனின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு கல்யாண பெண் மீனா அழுதது அனைவர் மனதையும் பிசைந்துவிட்டது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி காட்டுவீதியை சேர்ந்தவர் தனபால். இவர் ஒரு பெயிண்ட்டர். 29 வயதாகிறது. இவரது 2 அக்காவுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.
கடைசியாக கல்யாணத்துக்கு இருப்பது ஒரே தங்கை மீனா.. அதனால், முசிறி அருகே உடையான்பட்டியை சேர்ந்த குமரன் என்பவரை பார்த்து கல்யாணம் பேசி முடித்தார். சாப்பாட்டு பொறுப்பு உட்பட எல்லாமே தனபால்தான் இழுத்து போட்டு கொண்டு செய்தார்.

அழைப்பு
நேற்றுதான் கல்யாண நாள்.. நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சிக்கு தடபுடல் ஏற்பாடு நடந்தது. அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டு பக்கம் இருந்த வயல் பகுதிக்கு தனபால் சென்றார். இருட்டு நேரம் வேறு.. பாதையில் கண்ணே தெரியவில்லை.. அதனால், கால் தவறி, பக்கத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.

தனபால்
அந்த கிணற்றில் தண்ணீர் சுத்தமாக இல்லை.. அதனால் மண்டையில் பலமாக அடிபட்டு அப்படியே மயங்கிவிட்டார். இதனிடையே வயல் பக்கம் போன மகனை காணாமல், அவருடைய அப்பா தேடி வந்தார். அங்கு எங்கு தேடியும் தனபால் காணோம்.. அதனால் ஒரு சந்தேகத்தின்பேரில் அந்த கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோதுதான், தனபால் மயங்கி விழுந்து கிடந்தது தெரிந்தது.

கல்யாண வீடு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், தனபால் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர். இதனால் கல்யாண வீடே கதிகலங்கிவிட்டது..

மீனா
அண்ணனின் சடலத்தை கல்யாண பெண் மீனா கட்டிப்பிடித்து கொண்டு அழுதது காண்போரை கலங்கடித்தது.. போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. நடக்க இருந்த கல்யாணமும் நின்று போனது. தனபால் வீட்டு கல்யாணம் என்பதால் மகிழ்ச்சியில் இருந்த அந்த கிராமமே இப்போது சோகம் அப்பி காணப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications