“பொய் புகார்னா எதுக்கு முன் ஜாமீன் வாங்கணும்?” திமுக நிர்வாகிக்கு கேள்வி எழுப்பிய அமைச்சர் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், "விசாரிக்கவே இல்லை.. அதுக்குள்ள முன்ஜாமீனா?" என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி பதிவு செய்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பது தொடர்பாக தவெக அமைச்சர் ரமேஷ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Ramesh tvk srirangam dmk

ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் ராம்குமார் என்பவர் திமுக பகுதிச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பொதுப்பணிக்காக 1930-ல் எழுதிவைக்கப்பட்ட சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை, 2022-ல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும், மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ராம்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பான விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திலும் இருந்து வருகிறது. கோவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து பதிவு செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராம்குமார் மீது மட்டுமின்றி, பத்திரப்பதிவு அதிகாரி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், திமுக நிர்வாகி ராம்குமார் இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கோரியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், "இது பொய்யான புகார் என்று திமுகவினர் கூறுகின்றனர் என்றால், எதற்காக உடனடியாக முன்ஜாமின் கோர வேண்டும்? வழக்கை எதிர்கொண்டு அவர்கள் மீது குற்றமில்லை என்பதை நிரூபித்துக் கொள்ளலாமே. இதுவரை எந்தவிதமான கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. எதற்காக அவசர அவசரமாகச் சென்று முன்ஜாமின் வாங்குகிறார்கள்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

தவறு செய்தவர்கள் தான் பயப்படுவார்கள். திமுகவினர் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கின்றனர், அதற்கு பயந்துதான் முன் ஜாமீன் கோரி உள்ளனர்? தவறு செய்திருப்பதால் பயந்து இப்படி செய்கிறார்கள் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஸ்ரீரங்கத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் அபகரிக்கப்பட்ட பின்னணியில் ஓய்வுபெற்ற நீதிபதி, சார் - பதிவாளர் என யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+