அண்ணாமலை சொல்றாருன்னு! காமெடி பண்ணாதீங்க பாஸ்! கலாய்த்து விட்ட சு.வெங்கடேசன் எம்.பி.!
திருச்சி: அண்ணாமலை கூறுவதையெல்லாம் கேள்விகளாக கேட்டு காமெடி பண்ண வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் அண்ணாமலைக்கு எல்லாம் தன்னால் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
திருச்சியில் ரயில்வேயின் DREU மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் பதிலளிப்பார்
மேலும் அப்போது பேசிய அவர், ''தமிழகத்தின உரிமை சார்ந்த விஷயங்களை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.''

அண்ணாமலை கேள்வி
'கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக- காங்கிரஸ், அதை பாஜக மீட்க வேண்டுமா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்காரே?" என்ற கேள்விக்கு, "பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவர்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறார்கள் என்பது பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும். அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களை புதிதாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.''

கச்சத்தீவு மீட்பு
''அதேபோல, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு. அதை தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும்" என்றார். "ராஜபக்சே உடன் பேசிய ஆடியோவை வெளியிடுவேன்" என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?" என்ற கேள்விக்கு, "நிறைய ஆடியோக்கள் இருக்கு என்கிறார்கள். அத்தனையும் வெளியே வரட்டும். வந்தபின்பு கேட்டுவிட்டு சொல்கிறேன்" என்றார்.

காமெடி வேண்டாம்
"இலங்கை தமிழர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று அண்ணாமலை குற்றம்சாட்டுகிறாரே..?" என்ற கேள்விக்கு, "காமெடி பண்ணாதீங்க பாஸ்.." என்றார். சு.வெங்கடேசனின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை










Click it and Unblock the Notifications