Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு.. நிரந்தர மைதானத்தில் முதல் முறையாக.. சீறிப் பாயும் காளைகள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.

Jallikattu trichy

முன்பு ஊர் தெருவிலும் பிறகு மந்தையிலும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக ஊர் குளக்கரையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் தேவை என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அங்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இருபுறமும் 800 முதல் 900 பேர் அமரக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக திறக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பொங்கல் பண்டிகையை உங்களுடன் கொண்டாட இங்கு வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்துள்ளோம். திருச்சிக்கு மலைக்கோட்டையும், காவிரி ஆறும் அடையாளங்களாக இருப்பது போல் சூரியூர் ஜல்லிக்கட்டும் அடையாளம். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் முதலமைச்சர் மினி ஸ்டேடியங்கள் திறக்கப்பட்டு வருகிறது. நான் திறந்ததிலேயே இந்த சூரியூரில் திறக்கப்பட்டுள்ள மினி ஸ்டேடியம் தான் அழகாகவும் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும் உள்ளது." எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்க, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சூரியூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட உள்ளது. அந்த கார் சாவியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+