திருச்சியே திரும்பி பார்த்துச்சு.. தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய சுர்ஜித்! கேலோ இந்தியாவில் வெள்ளி
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா தொடரில் களரிப்பயிற்று போட்டியில் சுவடுகள் பிரிவில் தமிழகத்துக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சுர்ஜித்.
மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா விளையாட்டுத் தொடர் போட்டிகள் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியாவில் களரிப்பயிற்று போட்டியில் சுவடுகள் பிரிவில் தமிழகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா களரிபயிற்று விளையாட்டுப் போட்டி திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது. திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் வரும் 29 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். இதில் கேரளம், தமிழகம், புதுச்சேரி, கா்நாடகம், உத்திரபிரதேசம், தில்லி, கா்நாடகம், ஹரியாணா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோ்ந்த 103 வீரா்கள், 87 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.
சுவடுகள், கெட்டுக்காரி (கம்புச் சண்டை), வாள் சண்டை, ஹை கிக் ஆகிய 4 பிரிவுகளில் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனிநபா், குழு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை காலையில் மகளிருக்கான கம்புச் சண்டை குழு போட்டியில் கேரளத்தைச் சோ்ந்த அனுகிரஹா - துா்கா இணை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. அதே மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீலட்சுமி - அயனா இணை இரண்டாமிடம் பிடித்து வெள்ளியையும், அஸ்ஸாமைச் சோ்ந்த சமிக்ஷா பேகம் - ஜிக்யாசா அம்ஃபி இணை மற்றும் கேரளத்தைச் சோ்ந்த வித்யாலட்சுமி - வைகாலட்சுமி இணை மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.

பிற்பகலில் நடைபெற்ற ஆண்களுக்கான சுவடுகள் என்ற தலைப்பிலான தனிநபா் பிரிவு போட்டியில் அபிஷித் அசோகன் முதலிடம் பிடித்து தங்கத்தையும், தமிழகத்தின் திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த வி. சுா்ஜித் இரண்டாமிடம் பிடித்து வெள்ளியையும், ஹரியானாவைச் சோ்ந்த பிரணவ் ஜித்தேஷ் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த தேவநாராயணன் ஆகியோா் மூன்றாமிடம் பிடித்து வெண்கலத்தையும் வென்றனா்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications