மிஸ்டர் சீமான்! காங்கிரஸ்னா சும்மான்னு நினைக்காதீங்க! வரிந்துக் கட்டிகளமிறங்கிய கதர்ச்சட்டையினர்!
திருச்சி: காங்கிரஸ் கட்சியை பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் கேட்க ஆளில்லை என்று சீமான் நினைக்கக் கூடாது என்றும் அகிம்சையெல்லாம் அந்தக்காலம் எனவும் தமிழக இளைஞர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜீவ்காந்தியை பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை சீமான் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஈழத்தமிழர்கள் பெயரை கூறி வசூல் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர் சீமான் எனவும் தமிழக இளைஞர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
திருச்சியில் சீமான் உருவப்படத்தை துடைப்பக்கட்டையால் அடித்து தங்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படுத்தினர்.

சீமானுக்கு எதிராக
ராஜீவ்காந்தி என்ன பெரிய தியாகியா என நாம் தமிழர் கட்சி கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து ஒன்று அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரை போராட்டம் நடத்த வைத்துள்ளது. திருச்சியில் தமிழகஇளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சீமானின் உருவப்படம் துடைப்பக் கட்டையால் அடிக்கப்பட்டது.

இளைஞர் காங்கிரஸ்
அந்தப் போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் சீமானுக்கு எதிராக கடுகடுத்தார். காங்கிரஸ் கட்சியை பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் கேட்க ஆளில்லை என்றுசீமான் நினைக்கக் கூடாது என்றும் அகிம்சை வழியெல்லாம் அந்தக்காலம் எனவும் ஆவேசம் காட்டினார். ஈழத்தமிழர்கள் பெயரை கூறி வசூல் செய்து வயிற்றுப்பிழைப்பு நடத்துபவர் சீமான் எனவும் சாடினார்.

தரக்குறைவாக
15 லட்சம் மக்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதியாக உள்ள காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை சீமான் தரக்குறைவாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும்சீமான் பேசுவதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது
எனவும் கோபம் தெறிக்க பேசினார். ஈழ ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டு உலகம்
முழுவதும் பணம் வசூல் செய்வது தான் சீமானின் வேலை என்றும் ராஜீவ் காந்தியைபார்த்து தியாகியா எனக் கேட்பதற்கு சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை எனலெனின் பிரசாத் சாடினார்.

ஆமைக்கறி
வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தலைவர்களுக்கு பிரபாகரனுடன் இல்லாத நெருக்கமாசீமானுக்கு இருந்திடப் போகிறது என வினவிய அவர், ஒரு போட்டோவை மார்பிங்
செய்து வைத்துக்கொண்டு ஆமைக்கறி விருந்து கொடுத்தார் என சீமான் அரசியல்விளம்பரம் தேடியதாக சுட்டிக்காடிய அவர், இனியும் காங்கிரஸ் கட்சியை பற்றியோமறைந்த ராஜீவ்காந்தியை பற்றியோ சீமான் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும்
என எச்சரித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications